மீனவர்களுக்கு என தனி அமைச்சகம்.. நாடாளுமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தின் போது பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி லோக் சபாவில் பேசினார்.

அப்போது தமிழகத்தில் ஓகி புயலால் இதுவரை 257 மீனவர்கள் மாயமாகியுள்ளதாக அவர் கூறினார். ஆனால் தமிழக அரசிடம் அதுகுறித்த எந்த தகவலும் இல்லை என்றும் அன்புமணி குற்றம்சாட்டினார்.

 விரிவாக்கம் செய்யவில்லை

விரிவாக்கம் செய்யவில்லை

மீனவர்களை தேடும் பணியை உடனடியாக தொடங்காததும் நாட்டிக்கல் மைலை உடனடியாக விரிவாக்கம் செய்யாததுமே இதற்கு காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

 தனி அமைச்சகம்...

தனி அமைச்சகம்...

மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற நடக்காமல் இருக்க மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

 இதுவரை நிறைவேற்றவில்லை

இதுவரை நிறைவேற்றவில்லை

மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் அமைக்கப்படும் என 2014 தேர்தலின் போது பாஜக உறுதியளித்தது. ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் கொடுத்த வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்றவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

 நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்

நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்

மேலும் ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் நடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ambumani Ramadoss urging in Parliament to form separate ministry to fisherman. Anbumani urged this during question hour. Anbumani demanded in Parliament that Ockhi cyclone should be announced as national disaster.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற