அசால்ட்டாக அந்தியூரில் பேருந்தை இயக்கிய அதிமுக எம்எல்ஏ ராஜாகிருஷ்ணன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அரசுப்பேருந்தை ஓட்டும் அந்தியூர் எம்எல்ஏ ராஜகிருஷ்ணன்- வீடியோ

  அந்தியூர்: போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக அந்தியூர் எம்எல்ஏ ராஜாகிருஷ்ணன் அவராகவே பேருந்தை இயக்கினார்.

  ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த போராட்டத்தினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

  Anthiyur MLA drives bus from Erode to Anthiyur

  இந்நிலையில் திருச்சி, கோவை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், பெரியகுளம் என பல்வேறு இடங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய் வாஙக வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து காலை வேளையில் வெறிச்சோடி காணப்படுகிறது.

  திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, நீலகிரி, ஈரோடு, சென்னை உள்ளிட்ட இடங்களில் குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ஈரோடு பணிமனைக்கு ஆய்வு மேற்கொள்ள அதிமுக எம்எல்ஏ ராஜகிருஷ்ணன் சென்றிருந்தார்.

  அப்போது பேருந்தை இயக்குமாறு போக்குவரத்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்கள் உடன்படாததால் தனது ஓட்டுநர் உரிமத்தை போலீஸாரிடம் காண்பித்துவிட்டு ஈரோட்டிலிருந்து பேருந்தை இயக்கி அந்தியூர் வரை ஓட்டினார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  As the transport workers are involving in bus strike, ADMK MLA Rajakrishnan from Anthiyur rides the bus from Erode to Anthiyur, by showing his driving license to the police.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற