பிறந்து 10 நாளே ஆன ஆண் குழந்தையை விற்க முயற்சி.. ராமநாதபுரத்தில் பரபரப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பிறந்து 10 நாளே ஆன ஆண் குழந்தையை விற்க நடந்த முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள ஆதார் என்ற தனியார் குழந்தைகள் இல்லத்தில் பிறந்து 10 நாள் ஆன ஆண் குழந்தையை விற்க முயற்சி நடப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.

Attempt to sell a child thwarted

இதையடுத்து ஆள் கடத்தல் பிரிவு காவல்துறை அதிகாரி நாகசாந்தி விரைந்து வந்து விசாரணையில் இறங்கினார். விற்க முயற்சிக்கப்பட்டதாக கூறப்பட்ட குழந்தை மீட்கப்ப்டது. இது யாருடைய ஆண் குழந்தை என்று விசாரணை நடந்து வருகிறது.

இதுபோன்று ஏற்கனவே இக்காப்பகத்தில் குழந்தைகள் விற்கப்பட்டுள்ளனவா என்றும் விசாரணை நடந்து வருகிறது. காப்பாக உரிமையாளர் பானுமதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Attempt to sell a baby boy who is just 10 day old was stalled by police in Ramanathapuram.
Please Wait while comments are loading...