For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி எம்.எல்.ஏக்கள் செய்த செலவு எவ்வளவு தெரியுமா?

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் சராசரியாக தலா ரூ. 5.12 லட்சம் அளவுக்கு செலவு செய்துள்ளனர்.

புதுச்சேரி தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீரமைப்புக்கான அமைப்பு ஆகியவை இணைந்து இதுதொடர்பாக நடத்திய ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மொத்தம் 30 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் நடந்து முடிந்த தேர்தலில் சராசரியாக தலா ரூ. 5.12 லட்சம் செலவு செய்ததாக அந்த அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

புதுச்சேரியில் வேட்பாளர்கள் தலா ரூ. 20 லட்சம் வரை அதிகபட்சம் செலவழிக்கலாம் என தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. இருப்பினும் அதை விட மிக மிக குறைந்த அளவிலேயே இவர்கள் செலவிட்டதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

90 சதவீதம் பேர் பாதி செலவுதான்

90 சதவீதம் பேர் பாதி செலவுதான்

30 எம்.எல்.ஏக்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பாதி அளவிலேயே தேர்தல் செலவு செய்ததாக கணக்கில் தெரிவித்துள்ளனர்.

அனுமதிக்கப்பட்டதை விட 26 சதவீதம் குறைவுதான்

அனுமதிக்கப்பட்டதை விட 26 சதவீதம் குறைவுதான்

சராசரியாக ஒவ்வொரு எம்.எல்.ஏவும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு 26 சதவீதம் குறைவாகத்தான் இந்தத் தேர்தலின்போது செலவு செய்துள்ளனர் என்று இந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

காங்கிரஸ்தான் அதிக செலவு

காங்கிரஸ்தான் அதிக செலவு

30 எம்.எல்.ஏக்களில் காங்கிரஸின் பங்கு 15 பேராகும். இவர்கள் சராசரியாக தலா ரூ. 5.48 லட்சம் அளவுக்கு செலவு செய்துள்ளனர்.

என்.ஆர். காங்கிரஸ் - அதிமுக

என்.ஆர். காங்கிரஸ் - அதிமுக

என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 8 எம்.எல்.ஏக்கள் சராசரியாக 4.38 லட்சம் அளவுக்கு செலவு செய்துள்ளனர். அதிமுகவின் 4 எம்.எல்.ஏக்கள் தலா ரூ. 3.52 லட்சம் செலவு செய்துள்ளனர். திமுகவின் 2 எம்.எல்.ஏக்கள் சராசரியாக ரூ. 7.25 லட்சம் அளவுக்கு செலவு செய்துள்ளனர்.

டாப் 3 எம்.எல்.ஏக்கள்

டாப் 3 எம்.எல்.ஏக்கள்

அதிக அளவில் செலவு செய்த டாப் 3 எம்.எல்.ஏக்களில் முதலிடம் நெரவி டிஆர் பட்டனம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற திமுக எம்.எல்.ஏ. ஏ. கீதா இருக்கிறார். இவர் அனுமதிக்கப்பட்ட தொகையில் 52 சதவீத அளவுக்கு செலவு செய்துள்ளார். அதாவது ரூ. 10.36 லட்சம் செலவிட்டுள்ளார். ரூ. 10.17 லட்சம் செலவுடன் 2வது இடத்தில் காங்கிரஸின் கமலக்கண்ணன், ரூ. 10.13 லட்சம் செலவுடன் 3வது இடத்தில் என்.ஆர். காங்கிரஸின் பி.ஆர்.என். திருமுருகன் ஆகியோர் உள்ளனர்.

ரொம்பக் கம்மி செலவாளிகள்

ரொம்பக் கம்மி செலவாளிகள்

இவர்கள் மிகக் குறைந்த அளவில் செலவு செய்து எம்.எல்.ஏ ஆனவர்கள் - ஏ பாஸ்கர் அதிமுக ( ரூ.1.95 லட்சம்), அன்பழகன் அதிமுக (ரூ. 2.14 லட்சம்), ஜெயபால் என்கிற அய்யனார் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் (ரூ. 2.17 லட்சம்).

English summary
The average spending done by an MLA in Puducherry during the recently concluded elections was Rs 5.12 lakh. Puducherry Election Watch and Association for Democratic Reforms (ADR) have analyzed the election expenditure statements submitted after the Puducherry 2016 Assembly Elections for 30 MLAs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X