For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உடலைக் கெடுக்கும் பூச்சிக் கொல்லி மருந்துகள்... விழிப்புணர்வு ஏற்படுத்திய மனிதச் சங்கிலி

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை அருகே பாவூர் சத்திரத்தில் உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள், ரசாயனம் பயன்படுத்தி விளைவித்த, பழங்கள், காய்கறிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் 2ஆயிரம் மாணவ,மாணவிகள்,கலந்துக் கொண்ட மனித சங்கிலியை நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைவர் கருணாகரன் தொடங்கிவைத்தார்.

விளை நிலங்களையும், உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள், ரசாயனம் பயன்படுத்தி விளைவித்த, பழங்கள், காய்கறிகள், போன்றவைகள் உற்பத்தி செய்வதை தடுக்கும் வகையில் தற்போது கேரளா மாநிலத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தமிழ்நாடு கர்நாடகா உட்பட வெளிமாநிலங்களில் இருந்து வரும் பழங்கள், காய்கறிகள் நிரம்பிய வாகனங்களை சோதனையிட, சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

காய்கறி, பழங்களின் சாம்பிள் பெறும் சிறப்பு குழு, அதே இடத்தில் விஞ்ஞான ரீதியில் சோதனையிடும். பூச்சிக்கொல்லி மருந்து, ரசாயனம் பயன்படுத்தவில்லை என உறுதியானால் மட்டுமே, அந்த வாகனங்கள் கேரளாவுக்கு செல்ல அனுமதிக்கப்படும்.

தர நிர்ணய சான்று...

தர நிர்ணய சான்று...

தர நிர்ணய சான்று தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்று கேரள அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. கேரள அரசு விதித்த தடை அமலுக்கு வந்தது.

சோதனை குழு...

சோதனை குழு...

இந்நிலையில் தமிழக -கேரளா எல்லையோர மாவட்டமான நெல்லை மாவட்டம் ஆரியங்காவு சோதனை சாவடியருகே தனியாக காய்கறிகளை சோதனை செய்ய உணவு பாதுகாப்புத்துறை சார்பில் குழு ஒன்று இன்றுமுதல் செயல் படத் தொடங்கியுள்ளது.

அனுமதி...

அனுமதி...

தினமும் இரவு 7மணிமுதல் காலை 6மணிவரை இந்த குழுவினர் கேரளாவுக்கு வரும் காய்கறிகளை சோதனை செய்த பின்பே அம்மாநிலத்திற்குள் அனுமதிக்கின்றனர்.

காய்கறி உற்பத்தி...

காய்கறி உற்பத்தி...

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் பாவூர்சத்திரம்,கீழப்பாவூர்,சுரண்டை,சாம்பவர் வடகரை, உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் எராளமான விவசாயிகள் முழுக்க முழுக்க காய்கறிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

மனித சங்கிலி...

மனித சங்கிலி...

இன்று தமிழக அரசின் உத்திரவுப்படி வேளாண்மை துறை,தோட்டக்கலை துறை,வேளாண்மை உற்பத்தி பிரிவு சார்பில் பாவூர் சத்திரத்தில் உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள், ரசாயனம் பயன்படுத்தி விளைவித்த, பழங்கள், காய்கறிகள், குறித்து விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.

விவசாயிகள்...

விவசாயிகள்...

2 ஆயிரம் மாணவ,மாணவிகள்,கலந்துக் கொண்ட மனித சங்கிலியை நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைவர் கருணாகரன் தொடங்கிவைத்தார். இதில் ஏராளமான அதிகாரிகள்,விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.

English summary
An Awareness human chain was held on healthy veggies in Nellai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X