For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்பிபிஎஸ் படிப்பு கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் கோவை மாணவி!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தலித் குடும்பத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி படிக்க பணமின்றி சிரமப்பட்டு வருகிறார். தனக்கு உதவிகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளார் அவர்.

கோவையிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருபவர் சுகன்யா. விவசாயியான இவரது தந்தை பாஸ்கர், 5 வருடங்கள் முன்பு தனது 20 ஏக்கர் நிலத்தை விற்று சுகன்யாவின் படிப்புக்காக செலவிட்டார்.

B Sukanya, a medical student is has not been attending classes

இந்த நிலையில், 4வருடங்கள் முன்பு, பாஸ்கர் ஒரு சாலை விபத்தில் பலியானார். இதையடுத்து சுகன்யாவின் குடும்பம் வறுமையில் சிக்கியுள்ளது. சுகன்யாவின் தாய், தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.10000 சம்பளத்தில் வேலை பார்க்கிறார். 72 வயாகும் அவரது தாத்தா சின்னையா, பாதுகாவலராக வேலை பார்த்து மாதம் ரூ.6000 சம்பாதிக்கிறார்.

ஆனால், இந்த வருமானம், சுகன்யாவின் கல்வி கட்டணத்திற்கு போதவில்லை. அவருக்கு ரூ.20 லட்சம் கட்டணம் தேவைப்படுகிறது. இதுகுறித்து என்டிடிவி செய்தி சேனலிடம் பேசிய சுகன்யா, "இந்த பணம் மட்டும் எனக்கு கிடைத்துவிட்டால் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் திருப்பி செலுத்திவிடுவேன். இப்போதைய சூழலில் என்னால் வேறு படிப்புக்கும் செல்ல முடியாது. ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்ய உறுதியாக உள்ளேன். எனது தந்தையின் கனவும் அதுவாகத்தான் இருந்தது" என்றார் அவர்.

கட்டணம் செலுத்த தாமதமாகிக்கொண்டுள்ள நிலையில், சக மனிதர்களிடமிருந்து பண உதவியை எதிர்பார்ப்பதைதவிர சுகன்யாவுக்கு வேறு வழியில்லை என்று கூறுகிறது என்டிடிவி செய்தி. நிதி உதவி செய்ய விரும்புவோருக்கான விவரம் இதுதான்:

Name: Suganya G B
Bank: Tamilnad Mercantile Bank
Acc No: 364100050301698
IFSC: TMBL0000364

English summary
B Sukanya, a medical student is has not been attending classes for more than a year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X