For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிச்சை புகினும் கற்கை நன்றே... தேனியில் பிச்சை எடுத்தவர் மருத்துவ மாணவியாக ரஷ்யா பறந்தார்!

Google Oneindia Tamil News

தேனி: கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் தேனியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த மாணவி தற்போது மருத்துவம் படிப்பதற்காக ரஷ்யா சென்றுள்ளார்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. மனநலம் பாதிக்கப்பட்ட லட்சுமி தனது இரண்டு மகள்களுடன் 6 ஆண்டுகளுக்கு முன் தேனி பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.

Beggar turns medical student

இது தொடர்பாக தகவல் அறிந்த அவரது உறவினர்கள் லட்சுமியை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். கார்த்திகா, சர்மிளா என்ற அவரது இரண்டு மகள்களையும் தேனி அருகே கோடாங்கிபட்டியில் உள்ள ஒரு ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்தனர்.

அங்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், கார்த்திகா 8-ம் வகுப்பிலும், சர்மிளா 6-ம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர். கல்வியில் திறமையான மாணவியாகத் திகழ்ந்த கார்த்திகா எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 454 மதிப்பெண்கள் எடுத்தார். அதனைத் தொடர்ந்து பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் 892 மதிப்பெண்களைப் பெற்றார்.

சென்னையை சேர்ந்த ஒரு கல்வி அமைப்பு ரஷ்யாவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் படிக்க ஆண்டு தோறும் 200 மாணவிகளை தேர்வு செய்து அனுப்பி வருகிறது. அவர்களில் ஏழ்மை நிலையில் வாடும் மாணவி ஒருவரும் அடக்கம். அந்த மாணவி 50 சதவீத கல்விக்கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.

அதன்படி இந்த ஆண்டு, ரஷ்யா செல்ல கார்த்திகா தேர்வானார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் ரஷ்யா புறப்பட்டுச் சென்றார்.

இந்த வாய்ப்பு குறித்து கார்த்திகா கூறுகையில், "நான் சங்கரன்கோவிலில் 4-ம் வகுப்பு வரை படித்தேன். பின்னர் அம்மாவுடன் சேர்ந்து நானும், என் தங்கையும் பிச்சை எடுத்தோம். பின்னர் நாங்கள் 2 பேரும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டோம். மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த எங்கள் தாயாரை, உறவினர் வீட்டில் சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர். எனது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியான மறுநாள் எங்கள் தாயார் இறந்து விட்டார்.

எனக்கு ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது கடவுளின் அருளால்தான். அவர் மனித உருவில் வந்து உதவுகிறார். என்னிடம் அணிந்து செல்ல நல்ல ஆடைகள் கூட கிடையாது. எனக்கு புதிய ஆடைகள், செருப்பு, பைகள் என பலரும் வாங்கிக் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். நான் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்து அங்கிருந்து ரஷ்யா சென்றடைந்தேன்.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் பலர் மருத்துவப் படிப்புக்கு தேவையான புத்தகங்களை வாங்கிக் கொடுத்தனர். எனக்கு கலெக்டர் ஆக வேண்டும் என்று ஆசை உள்ளது. ஏனெனில் நான் பணியாற்றும் இடங்களில் பிச்சைக்காரர்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். என்னை போலவே வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் சிறுவர், சிறுமிகளை மீட்டு அவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது லட்சியம்" என்றார்.

இவருடைய தங்கை சர்மிளா தற்போது பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 488 மதிப்பெண்கள் எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A girl who was seen as a begger in Theni, is now joint in a medical college in Russia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X