For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மிஸ் பண்ணிடாதீங்க.. ஜூலை 27ம் தேதி நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம்! செவ்வாயும் கிட்ட வருதாம்!

வரும் ஜூலை 27ஆம் தேதி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜூலை 27ஆம் தேதி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம்- வீடியோ

    சென்னை: வரும் ஜூலை 27ஆம் தேதி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. செவ்வாய் கோளும் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது.

    இந்த பரந்து விரிந்த அண்டவெளியில் எண்ணிலடங்கா நட்சத்திரங்களும் கோடிக்கணக்கான கோள்களும் உள்ளன. இதில் பல அரிய நிகழ்வுகள் அவ்வப்போது அரங்கேறிய வண்ணம் உள்ளன.

    அந்த வகையில் வரும் ஜூலை மாதம் இருவேறு அபூர்வ நிகழ்வுகள் இந்த அண்டவெளியில் அரங்கேறவுள்ளது. அதாவது வரும் 27ஆம் தேதி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திரகிரகணம் நடைபெறவுள்ளது.

    முழு சந்திர கிரகணம்

    முழு சந்திர கிரகணம்

    சூரியன், பூமி, சந்திரன் ஆகியவற்றின் சுற்றுப்பாதையில், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது படுகிறது. இதனால் முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

    ஜனவரி 31ஆம் தேதி

    ஜனவரி 31ஆம் தேதி

    கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதியன்று முழு சந்திர கிரகணம் உருவானது. இந்தாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட இந்த சந்திர கிரகணத்தை இந்தியா, ஐரோப்பிய நாடுகள், ஹவாய், கனடா ஆகிய நாடுகளை சேர்ந்த மக்கள் கண்டு ரசித்தனர்.

    14% பெரியது, 30% பிரகாசம்

    14% பெரியது, 30% பிரகாசம்

    இந்த சந்திர கிரகணத்தின்போது சூப்பர் மூன், புளூ மூன், ஆகிய நிகழ்வுகள் ஏற்பட்டன. சந்திரன் வழக்கத்தை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் பிரகாசமாக தெரிவதே சூப்பர் மூன் எனப்படும்.

    நூற்றாண்டின் மிகப்பெரியது

    நூற்றாண்டின் மிகப்பெரியது

    இந்தாண்டின் தொடக்கத்தில் முழு சந்திர கிரகணம் தெரிந்த நிலையில், வரும் ஜூலை 27 மற்றும் 28ம் தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சந்திர கிரகணம் தோன்றவுள்ளது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் இதுவாகும்.

    ஆசியாவில் தெரியும்

    ஆசியாவில் தெரியும்

    கடந்த முறையை விட பெரிய அளவிலான இந்த சந்திர கிரகணம், 1 மணி 43 நிமிடங்கள் காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. ரத்த சிவப்பு நிறத்தில் தோன்றவுள்ள இந்த சந்திர கிரகணம் ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் தெளிவாக தெரியும்.

    இந்தியாவில் தெரியும்

    இந்தியாவில் தெரியும்

    வட அமெரிக்கா, ஆர்டிக்-பசிபிக் பகுதிகளில் இது தெரியாது. ஆசியா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியாவில் காலை நேரத்திலும், ஐரோப்பா, ஆப்ரிக்காவில் மாலை நேரத்திலும் இந்த சந்திர கிரகணம் தெரியும். இந்தியாவில் ஜூலை 27-28 தேதிக்கு இடைப்பட்ட நேரத்தில் 1 மணிநேரம் 43 நிமிடங்கள் இந்த சந்திர கிரகணத்தை கண்டுகளிக்கலாம்.

    நள்ளிரவுக்கும் இடையே

    நள்ளிரவுக்கும் இடையே

    ஜூலை 27ம் தேதியன்று சூரிய அஸ்தமன நேரத்துக்கும் நள்ளிரவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் சந்திர கிரகணம் தெரிய வாய்ப்பு உள்ளது. இதேபோல் ஜூலை மாதம் மற்றொரு அரிய நிகழ்வும் ஏற்படுகிறது.

    செவ்வாயும் நெருங்குகிறது

    செவ்வாயும் நெருங்குகிறது

    அதாவது, ஜூலை 30ஆம் தேதி செவ்வாய் கோளும் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. அதாவது 57.58 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் செவ்வாய் கோள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    15ஆண்டுகளுக்குப் பிறகு

    15ஆண்டுகளுக்குப் பிறகு

    இதனால் அன்றைய தினம் செவ்வாய் கோள் மிக வெளிச்சமாகவும் பெரியதாகவும் தெரியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ளது.

    225 மில்லியன் தொலைவு

    225 மில்லியன் தொலைவு

    இதையடுத்து வரும் 2035ஆம் ஆண்டு 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அபூர்வ நிகழ்வு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக செவ்வாய் கோள் பூமியிலிருந்து 225 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Biggest Lunar eclipse will be on July 27th in the century. In India, the moon will be visible on the intervening night July 27 and July 28 and will be visible for 1 hour and 43 minutes. In July, Mars will also be the closest to Earth in 15 years and will appear brighter and larger.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X