For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. இல்லாத தமிழ்நாடு.. பலவீனத்தில் திமுக... ரஜினியை இழுக்க தீவிரமடையும் பாஜகவின் முயற்சிகள்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இல்லை. தடுமாற்த்தில் தமிழக அரசு. திமுகவோ பலவீனத்தில். தமிழகத்தில் நல்ல தலைமைக்கு வந்துள்ள பெரும் பஞ்சத்தை வைத்து அரசியல் குளிர் காயத் துடிக்கின்றன குட்டிக் குட்டிக் கட்சிகள். இதில் இடையில் புகுந்து எப்படியாவது ஆதாயமடையத் துடிக்கும் பாஜக அதற்காக மலை போல நம்பியிருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தைத்தான். ரஜினியை பாஜகவுக்குள் இழுக்க என்னென்ன வழியெல்லாம் உள்ளதோ அத்தனை வழியையும் பயன்படுத்தி அவரை வழிக்கு கொண்டு வருமாறு பாஜக மேலிடத்திலிருந்து உத்தரவு பறந்துள்ளதாம். இதனால் ரஜினியை கட்சிக்குள் இழுக்க முயற்சிகளைத் தீவிரமாக்கியுள்ளது பாஜக.

ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க துடிக்காத கட்சிகளே கிடையாது. ஒரு காலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் நேரடியாக மோதியவர் ரஜினி. அவர் பாட்டுக்கு நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரை வம்பிழுத்தது அதிமுக. இதனால் கோபம் கொண்டு ரஜினி பொங்கி எழவே, அன்று முதல் அவரை தம் பக்கம் சாய்க்கும் முயற்சிகளை அரசியல் கட்சிகள் தொடங்கின.

ஆனால் ரஜினியோ இதுவரை எந்த அரசியல் கட்சி பக்கமும் சாயாமல் தப்பித்து வருகிறார். தமிழ் மாநில காங்கிரஸுடன் அவரது ஆதரவு வாய்ஸ் நின்று போனது. அதன் பிறகு நடிப்போடு சேர்த்து இந்த அரசியல்வாதிகளிடமிருந்து தப்பிப் பிழைப்பதும் அவருக்கு ஒரு உப தொழிலாக மாறிப் போனது.

திமுக முதல்

திமுக முதல்

ரஜினியை தங்களுக்கு ஆதரவாகத் திருப்ப திமுக முதல் புதிதாக பிறக்கும் கட்சிகள் வரை அத்தனை பேருமே முயன்றுள்ளனர்.

வாய்ஸ் பாஸ்

வாய்ஸ் பாஸ்

தேர்தல் சமயத்தில் ரஜினிக்கு தங்களுக்கு சாதகமாக இருக்கிறார் என்று சின்னதாக ஒரு "அலிபி"யை உருவாக்கி விடவாவது பலரும் துடிப்பது சகஜமாகி விட்டது. இதற்காக அவரது வாய்ஸைக் கேட்க தேர்தலுக்குத் தேர்தல் காவடி எடுக்கும் கூட்டம் நிறைய நிறைய...!

பாஜகவின் புது முயற்சி

பாஜகவின் புது முயற்சி

எத்தனையோ கட்சிகள் ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்தும் முடியாமல் போன நிலையில் தற்போது பாஜகவினர் படு தீவிரமாக அந்த முயற்சியை கையில் எடுத்துள்ளனர்.

ஜெயலலிதா உள்ளே...!

ஜெயலலிதா உள்ளே...!

ஜெயலலிதா தற்போது ஊழல் வழக்கில் சிறைக்குப் போய் விட்டார். அவர் எப்போது ஜாமீனில் வருவார் என்பது தெரியவில்லை. தமிழகத்தில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அரசு செயல்பட ஆரம்பித்துள்ளது.

திமுகவும் பலவீனத்தில்

திமுகவும் பலவீனத்தில்

மறுபக்கம் திமுகவும் பலவீனப்பட்டுப் போய் நிற்கிறது. அதற்கான காரணங்கள் பல.

மற்ற கட்சிகளில் நல்ல தலைவர்கள் இல்லை

மற்ற கட்சிகளில் நல்ல தலைவர்கள் இல்லை

மற்ற கட்சிகளைப் பொறுத்தவரை மக்களிடையே செல்வாக்கு இல்லாத செல்லாக் காசாகிப் போன கட்சிகள்தான். அந்தக் கட்சிகளின் தலைவர்களை தமிழக மக்கள் தங்களது ஏகோபித்த தலைவராக ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை.

கருணாநிதி, ஜெ.வை விட்டால்...!

கருணாநிதி, ஜெ.வை விட்டால்...!

இந்த நிமிடத்தில் தமிழகத்தைப் பொறுத்தவரை, தமிழக மக்களின் பெரும்பான்மைக் கருத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கு இரண்டே தலைவர்கள்தான். கருணாநிதி அல்லது ஜெயலலிதா. இந்த மாயையை உடைக்கும் மாபெரும் வேலையில்தான் தற்போது பாஜக இறங்கியுள்ளது.

சரியான மாற்றுத் தலைவர் ரஜினிதான்

சரியான மாற்றுத் தலைவர் ரஜினிதான்

கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு சரியான மாற்றுத் தலைவர், மக்கள் தலைவர் ரஜினி மட்டுமே என்ற கோஷத்துடன், குறிக்கோளுடன் அக்கட்சி ரஜினியை மொய்க்கத் தொடங்கியுள்ளதாம்.

விடா முயற்சி.. !

விடா முயற்சி.. !

ரஜினியை பாஜகவுக்குள் இழுக்க மோடி முதல் அனைத்து பாஜக தலைவர்களுமே விருப்பத்துடன் உள்ளனராம். தமிழகத்திற்கு மோடி வந்தபோது சென்னையில் உள்ள ரஜினி வீட்டுக்கே போய் சந்தித்துப் பேசினார். ஆனால் ரஜினி தனது நிலையை அப்போது தெளிவுபடுத்தவில்லை.

அமீ்த் ஷா மூலம் முயற்சி

அமீ்த் ஷா மூலம் முயற்சி

அதன் பின்னர் பாஜக தலைவர் அமீத் ஷா மூலம் ரஜினியை இழுக்க பேச்சுக்கள் நடத்திப் பார்த்தனர். அடுத்த முதல்வர் வேட்பாளர் நீங்கள்தான் என்று கூட கூறிப் பார்த்தனர். ஆனாலும் ரஜினி வழிக்கு வந்தது போலத் தெரியவில்லை.

வீட்டுக்குப் போன தமிழிசை

வீட்டுக்குப் போன தமிழிசை

இந்த நிலையில் சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் ரஜினி வீட்டுக்கே நேரில் போனார். ஆனால் ரஜினி வீட்டில் இல்லை. மனைவி லதா ரஜினிகாந்த்தை மட்டும் சந்தித்துப் பேசி விட்டு வந்தார்.

தொடரும் முயற்சிகள்

தொடரும் முயற்சிகள்

இப்படி அடுத்தடுத்து பாஜக தனது முயற்சிகளை இறுக்கியபடி உள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதா மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது மிகக் கடினம் என்ற நிலை உருவாகி வருவதால், எப்படியாவது ரஜினியை கட்சிக்குள் கொண்டு வந்து விட வேண்டும். 2016ல் தமிழக சட்டசபைத் தேர்தலை ரஜினி தலைமையில்தான் சந்திக்க வேண்டும் என்று தமிழக தலைமைக்கு பாஜக தலைமை உத்தரவ போட்டுள்ளதாம்.

திமுக - தமாகாவுக்கு உதவியது போல

திமுக - தமாகாவுக்கு உதவியது போல

இதுகுறித்து பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில், 1996ம் ஆண்டு திமுக - தமாகா கூட்டணிக்கு ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுத்தார். அது மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தியது. கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு நிகரான, மக்கள் செல்வாக்கு கொண்ட ஒரே நடிகர் ரஜினி மட்டுமே. எனவே அவரது ஆதரவும், வருகையும் பாஜகவுக்கு பெரும் பலம் சேர்க்கும் என்றார்.

இரண்டு கட்சிகளுமே காலி

இரண்டு கட்சிகளுமே காலி

மேலும் அவர் கூறுகையில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே ஊழல் புகார்களில் சிக்கித் தவிக்கின்றன. இவர்களுக்கு மாற்றான ஒரே கட்சியாக பாஜக மட்டுமே இருக்க முடியும். அதை நனவாக்க ரஜினி என்ற மந்திரம் தேவை என்றார் அவர்.

வலையில் சிக்குவாரா ரஜினி....?

English summary
Sensing a political opportunity in Tamil Nadu following the conviction of AIADMK general secretary Jayalalithaa, the Bharatiya Janata Party (BJP) has intensified its efforts to make superstar Rajinikanth join the party. A senior BJP leader said the party felt the situation as ideal for roping in someone like Mr. Rajinikanth, who had mass appeal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X