பாஜக பழிவாங்கும் படலத்தில் ஈடுபடாது- அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன

Posted By:
Subscribe to Oneindia Tamil

தூத்தக்குடி: பாஜக எப்போதும் பழிவாங்கும் நிகழ்ச்சியில் ஈடுபடாது என்று தூத்துக்குடியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவில்பட்டி நகர எல்லையான நாலாட்டின்புத்தூருக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வந்தார். அங்கு அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

BJP will not involve in Tit for Tat,says Pon.RadhaKrishnan

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக (அம்மா அணி) பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது போடப்பட்டுள்ள தேச துரோக வழக்கு மாநில அரசால் போடப்பட்டுள்ளது.

எந்த காரணத்தாலும், பிற கட்சிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை பா.ஜ.க. செய்தது கிடையாது. இந்த விவகாரத்தில் எங்களுக்கு தொடர்பு கிடையாது. சுற்றுலா பட்டியலில் இருந்து தாஜ்மகால் நீக்கப்பட்டதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை.

இதுகுறித்து முழுமையாக தகவல் கிடைத்ததும் கருத்து தெரிவிக்கிறேன். தாஜ்மகாலுக்கு உள்ள மரியாதை என்றுமே நிலைத்திருக்கும். சினிமாவுக்கு சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் சினிமா பாதிக்கப்படாத வகையில், மாநில அரசு வரி விதிக்க வேண்டும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Union Minister Pon.Radhakrishnan says that BJP will not involve in Tit for Tat activities.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற