For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொடைக்கானல்: 2வது சீசனுக்குத் தயாராகும் பிரையன்ட் பூங்கா- 2 லட்சம் மலர் செடிகள் நடவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 2-வது சீசனுக்காக சுற்றுலாப் பயணிகளைக் கவரும்வகையில் தோட்டக்கலைத் துறையினர் 2 லட்சம் மலர் செடிகளை நட்டு வைத்துள்ளனர்.

கொடைக்கானலில் ஆண்டுக்கு இரு சீசன்கள் நடைபெறுகின்றன. முதல் சீசனான கோடை சீசன் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள்வரை காணப்படுகிறது. இந்த சீசனில் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வடமாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வருவர்.

2 வது சீசன் தொடக்கம்

2 வது சீசன் தொடக்கம்

செப். 1-ம் தேதி முதல் அக்டோபர் வரை 2-வது சீசனில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இயற்கை எழில் மிகுந்த சுற்றுலா இடங்களைப் பார்த்து ரசிக்க அதிக அளவில் வருவர்.

பிரையன்ட் பூங்கா

பிரையன்ட் பூங்கா

இந்த இரு சீசன்களில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் பிரையன்ட் பூங்காவில் தோட்டக்கலைத் துறையினர் அலங்கார மலர் செடிகளை நடுவர். இந்த செடிகளில், சுற்றுலா பயணிகள் குவியும் சீசன் நாட்களில் பூத்து குலுங்கும் வகையில் பூங்கா தயார் செய்யப்படும்.

ஒரு கோடி மலர்கள்

ஒரு கோடி மலர்கள்

கடந்த கோடை விழா கண்காட்சிக்காக பிரையன்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கிய ஒரு கோடி மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவர்ந்திருந்தன.

தோட்டக்கலைத்துறை

தோட்டக்கலைத்துறை

இந்நிலையில் செப். 1-ம் தேதி ஆப் சீசன் தொடங்குகிறது. இந்த சீசனுக்காக, கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவைத் தயார்படுத் தும் பணியில் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

2 லட்சம் மலர்ச் செடிகள் நடவு

2 லட்சம் மலர்ச் செடிகள் நடவு

அதற்காக அவர்கள் பிரையன்ட் பூங்காவில் 2 லட்சம் அலங்கார மலர் செடிகளை நட்டுள்ளனர். இந்த செடிகளில் ஆப் சீசனில் மலர்கள் பூத்துக் குலுங்கும் வகையில் பூங்கா தயார் செய்யப்பட்டு வருகிறது.

குளிர்கால மலர்செடிகள்

குளிர்கால மலர்செடிகள்

ஆர்மண்ட்கேபேஜ், ரெட் கேனாஸ், ஸ்வீட் வில்லியம், பிங் ஆஸ்டர், கேலண்டூல்லா, லூபின் உள்ளிட்ட 10 வகை புதிய மலர் செடிகளை தற்போது நட்டுள்ளோம். இந்த செடிகள், குளிர் காலத்தில் மட்டுமே பூக்கும் தன்மை வாய்ந்தவை. இந்த செடிகளில் செப். 15-ம் தேதிக்குள் மலர்கள் பூத்துக் குலுங்கும்.

3 லட்சம் பயணிகள்

3 லட்சம் பயணிகள்

கடந்த கோடை சீசனில் மலர்களைப் பார்வையிட 6 லட்சம் பார்வையாளர்கள் பூங்காவுக்கு வந்துள்ளனர். இந்த ஆப் சீசனில் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அழகாகும் பூங்கா

அழகாகும் பூங்கா

சுற்றுலா பயணிகள் மலர்களைப் பார்த்து ரசிப்பதற்காக பூங்காவை அழகுபடுத்தும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

குடிநீர் தட்டுப்பாடு

குடிநீர் தட்டுப்பாடு

கடந்த 3 ஆண்டுகளாக கொடைக்கானலில் மழையில்லாததால் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஏரியில் தண்ணீர் குறைவு

ஏரியில் தண்ணீர் குறைவு

கொடைக்கானல் ஏரியில் சுற்றுலா பயணிகள், குழந்தைகள், படகு சவாரி சென்று எழில்மிகு இயற்கை அழகை கண்டு ரசித்து மகிழ்வர். மழை பெய்தாலும், பெய்யாவிட்டாலும் ஆண்டு முழுவதும் இந்த ஏரி வற்றாமல் காணப்படும். கடைசியாக 6 ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் ஏரி நிரம்பியது. அப்போது ஏரி ரம்மியமாகக் காணப்பட்டது.

படகு சவாரி

படகு சவாரி

தற்போது ஏரியில் தண்ணீர் குறைந்து உள்வாங்கியுள்ளது. 2வது சீசன் நேரத்தில் இந்த ஏரியில் படகு சவாரி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
Bryant Park, one of the major tourist attractions in Kodaikanal, is getting ready for the second season.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X