For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவில் இந்துக்களைவிட முஸ்லிம்கள் அதிகரித்துவிடுவார்களா? புள்ளி விவரங்கள் சொல்வதென்ன?

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: "இந்துக்கள் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால், இஸ்லாமியர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துவிடும்" என்று விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொக்காடியா சமீபத்தில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். ஆனால் உண்மையிலேயே அதேபோன்ற நிலை இந்தியாவில் உள்ளதா என்பதை, சில புள்ளி விவரங்களை ஒப்பிட்டு பார்த்தால் தெரிந்துகொள்ள முடியும்.

மறுமதமாற்றம் எனக்கூறிக் கொண்டு, இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை இந்து மதத்திற்கு திருப்பும் வேலையில் சில இந்து ஆதரவு இயக்கங்கள் ஈடுபட்டுவருகின்றன. இப்பிரச்சினை நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. இந்து அமைப்புகள் சொல்லும் ஒரே குற்றச்சாட்டு, இப்போதுள்ள மதமாற்ற நிலை நீடித்தால், இந்துக்கள் இந்த நாட்டில் சிறுபான்மையினராகிவிடுவார்கள் என்பதுதான்.

இந்துக்கள் எண்ணிக்கை 3 சதவீதம் குறைந்தது

இந்துக்கள் எண்ணிக்கை 3 சதவீதம் குறைந்தது

ஆனால் இந்து அமைப்புகள் கூறும் அளவுக்கு மிதமிஞ்சிய மக்கள்தொகை பெருக்கத்தை சிறுபான்மையினர் கொண்டிருக்கவில்லை என்பதை மக்கள்தொகை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2010ம் ஆண்டில் வெளியான இந்திய இன்ஸ்ட்டிடியூட்டின், மக்கள்தொகை ஆய்வு அறிக்கையில், 1961ம் ஆண்டில் இந்துக்கள் 83.5 சதவீதம் இருந்ததாகவும், 2001ல் அது 80.5 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் எண்ணிக்கை உயர்வு

முஸ்லிம்கள் எண்ணிக்கை உயர்வு

அதே நேரம் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இதே காலகட்டத்தில் 10.7 சதவீதமாக இருந்து, 13.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது இஸ்லாமியர்கள் எண்ணிக்கை 40 ஆண்டு காலத்தில் 2.7 சதவீதமாக மட்டுமே உயர்ந்துள்ளது.

சுதந்திரத்திற்கு முன்னும், பின்னும்

சுதந்திரத்திற்கு முன்னும், பின்னும்

அதேபோல 1901ல் இந்தியாவில் இந்துக்கள் 200 மில்லியனாக இருந்த நிலையில், 2001ல் அவர்கள் எண்ணிக்கை 800 மில்லியனை தாண்டியுள்ளது. இதே காலகட்டத்தில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை 50 மில்லியனில் இருந்து 150 மில்லியனாக உயர்ந்துள்ளது. இஸ்லாமியர்கள் எண்ணிக்கை குறைவாக உயர்ந்ததற்கு, சுதந்திரத்திற்கு பிறகு ஏற்பட்ட பாகிஸ்தான் பிரிவினையும், பாகிஸ்தானுக்கு இந்திய இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக சென்றதும் காரணமாக கூறப்பட்டாலும் கூட, 1961க்கு பிறகு உள்ள கணக்கெடுப்பிலும் பெரிய அளவுக்கு இஸ்லாமியர்கள் மக்கள் தொகை வளரவில்லை என்பது கவனிக்க தக்கது.

முஸ்லிம்கள் சராசரி வளர்ச்சி அதிகம்

முஸ்லிம்கள் சராசரி வளர்ச்சி அதிகம்

அதே நேரம், 1961க்கும் 2001க்கும் இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு ஆண்டின் சராசரி மக்கள்தொகை பெருக்கத்தை கணக்கிட்டால் அதில் இந்துக்களுக்கு கடைசி இடமே கிடைத்துள்ளது. ஏனெனில் இந்த காலகட்டத்தில் இஸ்லாமியர்கள் 2.70 சதவீதமும், சீக்கியர்கள் 2.24 சதவீதமும் பவுத்தர்கள் 2.23 சதவீதமும் ஆண்டு சராசரி வளர்ச்சியை கொண்டுள்ளனர். ஆண்டுதோறும் அதிகரிக்கும் இந்துக்களின் விழுக்காடு 2.04-ஆக உள்ளது.

குடும்பகட்டுப்பாடு

குடும்பகட்டுப்பாடு

ஆயினும் 1991 முதல் 2001க்கு இடைப்பட்ட காலத்தில் முஸ்லிம்களின் மக்கள்தொகை பெருக்க வேகம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குழந்தை பேறு குறித்த விழிப்புணர்வு, குடும்பகட்டுப்பாட்டு முறைகள் போன்றவை இந்திய முஸ்லிம்களுக்கு அதிகம் கிடைத்துள்ளதன் விளைவாக மக்கள்தொகை பெருக்கத்தின் வேகமும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

நூற்றாண்டின் இறுதியிலும் முந்த முடியாது

நூற்றாண்டின் இறுதியிலும் முந்த முடியாது

இந்திய திட்ட கமிஷன் எதிர்பார்ப்புப்படி, 2051ம் ஆண்டில், இந்திய மக்கள்தொகை 1627.96 மில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மொத்த மக்கள் தொகையில் 16 சதவீதம் முஸ்லிம்கள் என்று வைத்துக் கொண்டாலும், 260.47 மில்லியன் முஸ்லிம்கள் இந்தியாவில் இருப்பார்கள். மொத்தத்தில் இந்த நூற்றாண்டின் இறுதியில் கூட இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கை 20 சதவீதத்தை ஒட்டிதான் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். எனவே, இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், இந்துக்களை விட அவர்கள் அதிக எண்ணிக்கையாகிவிடுவார்கள் என்று வலதுசாரி அமைப்புகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு புள்ளி விவர ஆதாரம் கிடையாது என்றே கூற முடியும்.

English summary
With available data and ran some projections to conclude that while the proportion of Muslims is likely to rise, there is little to no chance of India having more Muslims than Hindus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X