கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்: 4 பேர் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கல்லூரி மாணவி ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே உள்ள வேளம்பட்டியை சேர்ந்தவர் மீனா (வயது 21 பெயர் மாற்றப்பட்டுள்ளது), கிருஷ்ணகிரியில் பெண்கள் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றார். அதே வேலம்பட்டியை சேர்ந்த கார் டிரைவரரான சேரனுடன் இவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் 18ந் தேதி மாலை கல்லூரி முடிந்ததும் மீனாவைக் காரில் அழைத்து சென்ற சேரன் ராயக்கோட்டை அருகே உள்ள போடம்பட்டி காட்டு பகுதியில் நெடுஞ்சாலையில் அமைந்து பேசிக்கொண்டிருந்தபோது, அதே வழியாக வந்த ராயக்கோட்டையை சேர்ந்த 4 பேர், சேரனை அடித்து கட்டிபோட்டுவிட்டு மீனாவையும் கட்டிபோட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
கவலைகிடமாக இருந்த மீனா கூச்சல் போடவே அப்பகுதியை சேர்ந்த கிராமத்தினர் நான்கு பேரையும் பிடித்து ராயக்கோட்டை போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். போலீசார் விசாரணையில் இச்செயலில் ஈடுபட்டவர்கள் பிரகாஷ், சுப்பரமணி, மணி, பிரகாஷ் என தெரியவந்தது.
போலீசார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் சிகிக்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எஸ்.பி.கண்ணம்மாள், டி.ஐ.ஜி. அமல்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.