For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆரம்பமே கண்ண கட்டுதே.. தீபா அணி பணப்பட்டுவாடா.. போட்டோ எடுத்த செய்தியாளருக்கு கொலை மிரட்டல்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் ஆதரவாளர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளனர். அதனை போட்டோ எடுக்க முயன்ற புகைப்பட கலைஞருக்கும் செய்தியாளருக்கும் கொலை மிரட்டல் வி

Google Oneindia Tamil News

சென்னை: பேரவைத் தொடங்கிய ஒரே மாதத்தில் தேர்தலில் போட்டியிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கியுள்ள தீபா.

ஜெயலலிதா மரணத்திற்கு பின் திடீரென அரசியலில் குதித்துள்ள இவர் முதல் முறையாக தேர்தல் களம் காணுகின்றார். இவரே வாக்காளருக்கு பணம் தருவது வாக்காளர்களின் புருவத்தை உயர்த்தியுள்ளது.

படகு சின்னத்தில் போட்டியிடும் தீபா ஆர்.கே. நகர் தொகுதியில் 1000 ரூபாயில் இருந்து 3000 ரூபாய் வரை வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக தொகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தகராறு

தகராறு

இந்நிலையில், படகு சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என்று கூறி நேற்று முழுவதும் தீபா அணியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பணம் பிரித்து கொடுப்பது தொடர்பாக தீபா அணியில் உள்ள பெண்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கேமரா பறித்து..

கேமரா பறித்து..

தகராறு முற்றி சலசலப்பு அதிகரிக்கவே அதனை புகைப்படம் எடுக்க பத்திரிகையாளர் ஒருவர் முயன்றுள்ளார். அவரை தடுத்து நிறுத்திய தீபா ஆதரவாளர்கள் அவரிடம் இருந்து கேமராவை பறித்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

முற்றுகை

முற்றுகை

இதனையடுத்து, தன்னந்தனியாக இருந்த புகைப்படக் கலைஞர் ஆர்.கே. நகர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இந்த தகவலை அறிந்த மற்ற பத்திரிகையாளர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.

கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

பின்னர், பணப்பட்டுவாடா தொடர்பாக செய்தி சேகரிக்க, தகராறு நடைபெற்ற இடத்திற்கு சென்ற பத்திரிகையாளர்களை தீபா பேரவையினர் கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளனர். மேலும், இதுப்பற்றி செய்தி போட்டால் அவ்வளவுதான் என்ற ரேஞ்சுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஆரம்பமே இப்படி கண்ண கட்டுதேன்னு தீபாவை அதிர்ச்சியாக பார்த்து வருகின்றனர் ஆர்.கே. நகரில் செய்தி சேகரிக்கும் செய்தியாளர்கள்.

English summary
News photographer was attacked by Deepa supporters, who gave money to voters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X