ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் என்னிடம் விசாரியுங்கள்... என் மகனை விட்டு விடுங்கள்- ப.சிதம்பரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அந்நிய நேரடி முதலீட்டு வாரியத்தின் பரிந்துரையை ஏற்று, திட்ட ஒப்பந்தத்துக்கு நான்தான் அனுமதி அளித்தேன். ஆனால், இது தொடர்பான விசாரணையில் என்னை விசாரிக்காமல் என் மகனைத் தொந்தரவு செய்யாதீர்கள் என்று ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஏர்செல்-மேக்சிஸ் தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.இந்த வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

CBI should question me and not harass Karti - P Chidambaram

அதில் மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேட் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் 5000 கோடி முதலீடு செய்ய அனுமதி கோரியிருந்ததாகவும் அதற்கு அப்போதைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சட்டவிரோதமாக அனுமதி அளித்ததாகவும் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் சி.பி.ஐ தவறான தகவல்களைப் பரப்புவது வருத்தமளிக்கிறது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

அந்நிய நேரடி முதலீட்டு வாரியத்தின் பரிந்துரையை ஏற்று, திட்ட ஒப்பந்தத்துக்கு நான்தான் அனுமதி அளித்தேன். ஆனால், இது தொடர்பான விசாரணையில் என்னை விசாரிக்காமல் என் மகனைத் தொந்தரவு செய்யாதீர்கள் என்று ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Aircel-Maxis, FIPB recommended and I approved minutes. CBI should question me and not harass Karti Chidambaram posted P.Chidambaram.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற