For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேருந்து கட்டண உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம்: அமைச்சர் ஜெயக்குமார்

பேருந்து கட்டண உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    பேருந்து கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு

    சென்னை: பேருந்து கட்டண உயர்வுக்கு தமிழக அரசு எந்த விதத்திலும் காரணமில்லை. மத்திய அரசு தான் காரணம் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

    தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

     Central Government is Responsible for the Bus Fare Hike says TN Minister

    இந்நிலையில், உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் சிறிது குறைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றே தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு தமிழக அரசு எந்த விதத்திலும் காரணம் இல்லை. மத்திய அரசிடம் நிதி கேட்டும் போதுமான அளவு தராததே இதற்கு காரணம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

    பேருந்து கட்டண உயர்வுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு தான் காரணம். இதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், இனி எந்த காலத்திலும் தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் இடம் கிடையாது என்றும் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு வந்த அதிமுக தலைமையிலான தமிழக அரசு, திடீரென மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Central Government is Responsible for the Bus Fare Hike says TN Minister Jayakumar. He also added that the Central Government is not Providing enough fund to the State.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X