தமிழக தொழிற்சங்கத்தின் ஸ்டிரைக்கிற்கு மத்திய தொழிற்சங்கத்தினர் ஆதரவு... 11-இல் உண்ணாவிரதம் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு மத்திய தொழிற்சங்கத்தினர் ஆதரவு கொடுத்து 11-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த அறிவித்துள்ளனர்.

2.57 மடங்கு ஊதிய உயர்வு, ஓய்வூதிய தொகை கோரி தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 6 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Central government's Union Trade Workers going to support TN workers strike

இதனால் போதிய பேருந்துகள் இயக்கமின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 23 முறை பேச்சுவார்த்தை நடத்திவிட்டதால் இனி பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துவிட்டார்.

பொங்கல் பண்டிகை நெருங்கவுள்ளதால் தொழிலாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

இந்நிலையில் தமிழக தொழிற்சங்கத்தினரின் போராட்டத்துக்கு ஆதரவாக மத்திய தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். சென்னையில் வரும் 11-ஆம் தேதி முதல் நடத்தப்படும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 6 தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளவுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
Union Trade workers are going to start indefinite hunger strike on Jan 11 to support TN workers strike.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற