ஓகி புயல், மழை பாதிப்பு: சென்னை, கன்னியாகுமரியில் மத்திய குழு ஆய்வு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓகி புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழை பாதிப்பு குறித்து மத்தியக்குழு சென்னை தலைமைச் செயலகத்தில் மாநகராட்சி ஆணையர் கார்த்திக்கேயனுடன் ஆலோசனை மேற்கொண்டனர். சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட மழை பாதிப்புகளை பார்வையிட மத்தியக் குழு புறப்படுகிறது.

கடந்த நவம்பா் மாத தொடக்கத்தில் சென்னையில் வடகிழக்கு பருவமழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மாத இறுதியில் தென்தமிழகம், கேரளா மாநிலத்தை ஓகி புயல் தாக்கியது. இதில் ஏராளமான உயா்ச் சேதங்களும், பொருட் சேதங்களும் ஏற்பட்டன.

Central team experts visit rain affected areas

இதனைத் தொடா்ந்து ஏறதாழ ஒரு மாதம் கழித்து புயல் தொடா்பான பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவினா் தமிழகம் வந்துள்ளனா். 8 போ் கொண்ட மத்திய குழு இரு அணிகளாக பிாிந்து ஆய்வு நடத்த உள்ளது.

மத்திய உள்துறை இணைச் செயலாளர் சஞ்சீவகுமார் ஜிந்தால் தலைமையிலான 4 போ் கொண்ட குழுவினா் சென்னை, திருவள்ளூா் உள்ளிட்ட பகுதிகளில் வழகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்கின்றனா்.

இதே போன்று மற்றொரு 4 போ் கொண்ட குழுவானது ஓகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கன்னியாகுமாி மாவட்டத்தில் ஆய்வு செய்கின்றது. குமாி மாவட்டத்தின் தூத்தூா், சின்னத்துரை உள்ளிட்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொள்ளும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நீர்வளத்துறை அதிகாரி நாகமோகன், புயல் பாதிப்புகளுக்கான தற்போதைய தீர்வை மட்டுமே எங்களால் வழங்கமுடியும். நிரந்தர தீர்வை தமிழக அரசுதான் வழங்க வேண்டும் என்று கூறினார். மேலும் தமிழக அரசு தந்த தகவல்கள் அடிப்படையில் ஆய்வை மேற்கொள்ள உள்ளோம். களத்தின் சூழலை ஆராய்ந்து உண்மைத் தன்மைக்கு ஏற்ப அறிக்கை தயாரிப்போம் என்றும் தெரிவித்தார்.

ஒரே நாளில் ஆய்வினை முடித்துக்கொள்ளும் மத்திய குழுவினா் நாளை தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை மேற்கொள்கின்றனா். இதனைத் தொடா்ந்து மத்திய குழுவினா் டெல்லி செல்கின்றனா்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The central team led by senior IAS officer Sanjeev Kumar Jindal would also hold discussions with the Corporation Commissioner Karthikeyan IAS and Revenue officials before submitting its report to the Centre.A four-member central team will visit the rain affected areas in Chennai.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற