வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை : கடலோர மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளதால் தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று கூறியதாவது, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டுள்ளது.

 Chances of rain in TN Coastal Areas due to Low pressure zone

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியை ஒட்டியுள்ள கடலோர மாவட்டங்களில் நாளை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடகிழக்கில் இருந்து நிலக்காற்று வீசுவதால் இரவில் குளிர் காற்று நிலவும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் கடலோரப்பகுதிகளில் 45 கி.மீ., முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
New low Pressure zone likely to get Rain in Tamilnadu. Chennai meteorological centre asks fishermen to ensure their safety while leaving seas for fishing.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற