For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை வண்ணாரப்பேட்டை டூ கொருக்குப்பேட்டை... மெட்ரோ சுரங்கப் பணி நிறைவு!

சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து கொருக்குப்பேட்டை வரை மெட்ரோ ரயிலுக்காக சுரங்கம் அமைக்கும் பணி நிறைவு செய்யப்பட்டது.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் பணியில் வண்ணாரப்பேட்டையில் இருந்து கொருக்குப்பேட்டை வரை சுரங்கம் தோண்டும் பணி இன்றுடன் நிறைவடைந்தது.

சென்னையில் மெட்ரோ ரயில் தடம் அமைக்கும் பணி பல வருடங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையில் மெட்ரோ ரயிலின் முதல் வழித்தடமும், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரையில் இரண்டாவது வழித்தடமும் அமைக்கப்பட்டுள்ளது.

Chennai Metro from washermenpet to korukkupet completed

அதில், முதல் வழித்தடத்தின் விரிவாக்க திட்டமான வண்ணாரப்பேட்டை முதல் திருவெற்றியூர் விம்கோ நகர் வரையிலான சுமார் 9.2 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில்பாதை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளில், வண்ணாரப்பேட்டை முதல் கொருக்குப்பேட்டை வரையில் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில்இன்றுடன்அந்தபணிநிறைவடைந்துள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் தலைமை பொது மேலாளர் அரவிந்த் ராய் முன்னிலையில் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு பெற்றது.

English summary
Chennai Metro work, under ground train track work was finished today. The track starts from Chennai Washermenpet to korukkupet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X