கரைக்கு இடம் பெயர்ந்த கடல்.. மக்கள் உற்சாகக் குதியாட்டம்.. மெரீனாவிலிருந்து லைவ் ரிப்போர்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கனமழையால் மூழ்கியது மெரினா கடற்கரை- வீடியோ

  சென்னை: சென்னைக்கு அழகே மெரீனா கடற்கரைதான். ஒருநாள் பெய்த மழையால் கடற்கரை முழுவதும் வெள்ள நீரால் நிரம்பியுள்ளது. இந்த நீரில் உற்சாகமாக விளையாடுகின்றனர் இளைஞர்களும் குழந்தைகளும்.

  மெரீனா கடற்கரை பொழுது போக்குவதற்கு சிறந்த இடம். மழையால் கடந்த 3 நாட்களாக கடற்கரை பக்கமே மக்கள் செல்லவில்லை இதனால் வெறிச்சோடி காணப்பட்டது.

  வியாழக்கிழமை மாலை முதல் விடிய விடிய கொட்டிய 30 செமீ மழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

  பிரம்மாண்ட நீச்சல் குளம்

  பிரம்மாண்ட நீச்சல் குளம்

  வீடுகளுக்கும், கடைகளுக்கும் வெள்ளநீர் புகுந்தது. மெரீனா கடற்கரையில் மணல் பரப்பு முழுவதும் மழைநீராக தேங்கி பிரம்மாண்டமான நீச்சல் குளமாக மாறிவிட்டது.

  மெரீனா கடற்கரையா?

  மெரீனா கடற்கரையா?

  மணல் பரப்பு தெரியாதவகையில் மெரீனா கடற்கரை முழுவதுமே குளமாக காணப்பட்டது. லைட்ஹவுஸ் முதல் அண்ணாசமாதி வரை மணல்பரப்பெங்கும் மழைநீர் தேங்கியிருந்தது.

  எட்டிப்பார்த்த சூரியன்

  எட்டிப்பார்த்த சூரியன்

  விடிய விடிய விடாமல் மழை பெய்தாலும் விடிந்த பின்னர் வழக்கம் போல சூரிய பகவான் தனது கடமையை செய்ய கிளம்பிவிட்டார். 10 மணிக்கு வழக்கம் போல சென்னையில் வெயில் தலை காட்டியது.

  மெரீனாவில் குவிந்த கூட்டம்

  மழை விட்டு வெயில் தலைகாட்டிய உடனேயே இளைஞர்களும், குழந்தைகளும் மெரீனா கடற்கரைக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். தேங்கியிருந்த மழைநீரில் விளையாடியும், நீச்சலடித்தும் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர். நம்ம மக்கள்தான் சுனாமியிலேயே ஸ்விம்மிங் போடுறவங்களாச்சே... மெரீனாவில் இருந்து லைப் ரிப்போர்ட் பாருங்க வாசகர்களே!

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Chennai Rain Merina beach a live report.The North East monsoon heavy rain in Chennai. On the Marina Beach Road, people were seen wading their vehicles through close to knee-deep water.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற