சோழவரம் ஏரி வறண்டது... புழல் ஏரிக்கு குடிநீர் அனுப்பும் பணி நிறுத்தம்... கவலையில் சென்னைவாசிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரியான சோழவரம் ஏரி வறண்டதால் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் மாநிலம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதனால் ஆங்காங்கே மக்கள் குடிநீருக்காக காலிக்குடங்களுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Chennai's water source Chozhavaram Lake was dried, it seems there will be more water crisis.

தற்போது சென்னைக்கு சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் 881 மில்லி கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது வெறும் 6 மில்லி கனஅடி தண்ணீரே உள்ளது. இதனால் சோழவரத்தில் இருந்து ராட்சதக் குழாய்கள் மூலம் புழல் ஏரிக்கு குடிநீர் அனுப்பும் பணிகள் நிறுத்தப்பட்டன. ஆங்காங்கே குட்டை போல் தேங்கிய தண்ணீரைக் கொண்டு சென்னைவாசிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த சோழவரம் ஏரியானது கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2005-ஆம் ஆண்டு வறண்டது. அதோடு தற்போது கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே இந்த ஏரி வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால் சென்னை மக்கள் கலங்கி உள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chozhawaram Lake was dried before Summer season, so the water which was taken to Puzhal Lake was stopped, there will be water crisis more than ever, feels chennai people.
Please Wait while comments are loading...