Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூய்மையே கடவுள்.. மோடியின் திட்டத்திற்கு ரஜினி ஆதரவு

மத்திய அரசின் தூய்மையே சேவை திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் தூய்மையே சேவை திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். தூய்மையே கடவுள் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினி தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி தூய்மை இந்தியா பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது, திறந்தவெளி கழிப்பிடங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அனைவருக்கும் கழிவறை வசதியை ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இந்தப் பிரச்சாரம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.

Cleanliness is godliness - Rajini post Twitter

இந்நிலையில், மக்கள் ஆதரவை திரட்டி தூய்மை இந்தியா திட்டத்தை மேலும் பிரபலப்படுத்துவதற்காக. 'தூய்மையே சேவை' என்ற பிரச்சாரத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். இது வரும் அக்டோபர் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக பிரபல தொழிலதிபர்கள், முன்னணி விளையாட்டு வீரர்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி உள்ளார்.

தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி விரும்பினார். பல்வேறு தரப்பினரின் பங்களிப்புடன் தூய்மை இலக்கை அடைய முடியும் என்று அவர் நம்பினார்.

எனவே, தூய்மை இந்தியாவை உருவாக்க உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். தூய்மையை வலியுறுத்தி நடைபெறும் பிரச்சாரத்தில் பங்கு பெறுங்கள்.

இந்த பிரச்சாரம் வெற்றி பெற உங்களது பொன்னான நேரத்தை ஒதுக்க முன்வர வேண்டும். தூய்மை இந்தியா திட்டம் என்பது மிகவும் உன்னதமான சேவை. இதன்மூலம் ஏழைகள், பின்தங்கிய மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு சேவை செய்ய முடியும். அசுத்தமான சுற்றுப்புறம், சமூகத்தில் நலிவடைந்த மக்களைக் கடுமையாக பாதிக்கும் என்று மோடி கூறியுள்ளார்.

இந்தநிலையில் இந்த திட்டத்திற்கு பிரதமர் மோடியின் தூய்மையே சேவை திட்டத்திற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தூய்மையே கடவுள் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினி தெரிவித்துள்ளார்.

பிரதமரின் தூய்மையே சேவை திட்டத்திற்கு தனது முழு ஆதரவு உண்டு என்றும் நடிகர் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+