For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவூதியில் உயிரிழந்த மீனவர்களின் உடலை தமிழகம் அனுப்ப நடவடிக்கை கோரி மோடிக்கு எடப்பாடிக்கு கடிதம்

சவூதி அரேபியாவில் உயிரிழந்த நாகர்கோவில் மீனவர்கள் 3 பேரின் உடல்களை தாயகம் கொண்டு வர இந்திய தூதரகங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியா கடிததத்தில் முதல்வர் எடப்

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

நாகர்கோவில்: சவூதி அரேபியாவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் மீது வெளிநாட்டுக் கப்பல் மோதியதில் உயிரிழந்த 3 மீனவர்களின் உடல்களை தமிழகம் கொண்டு வர நடவடி்க்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் எடப்பாடி வலியுறுத்தியுள்ளார்.

நாகர்கோவிலை அடுத்த கேசவன்புத்தந்துரை மற்றும் ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த ஜார்ஜ், ஜோசப் சுகந்தன், நெவில். இவர்கள் மீனவர்களாவர். இவர்கள் 3 பேரும் சவூதி அரேபியாவில் தரின் என்ற இடத்தில் விசைப் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வெளிநாட்டுக் கப்பல் ஒன்று இவர்களது விசைப்படகு மீது மோதியது.

CM Edappadi Palanisamy wrote letter to PM in Fishermen died in Saudi issue.

இதில் படகு நொறுங்கியதுடன் 3 பேரும் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்த மீனவர்களை மீட்டுத் தாருங்கள் என்று மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே படகு விபத்தில் ஒரு மீனவர் மட்டுமே உயிரிழந்ததாகவும் மற்ற 2 பேர் மாயமானதாகவும் தகவல் கிடைத்துள்ளதாகவும் கேசவன்புத்தந்துரை மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் உயிரிழந்த மீனவர்களின் உடல்களை மீட்டு இந்திய தூதரகம் மூலம் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு உரிய நிவாரணத்தை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து பெற்று தர வேண்டும். ஈரான் சிறையில் 35 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

English summary
CM Edappadi Palanisamy writes letter to PM demanding to bring back the bodies of fishermen died in Saudi Arabia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X