For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொடுமுடியில் வேளாண் கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுகவினர் ரகளை.. தேர்தல் ரத்து

கொடுமுடி கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து: வாக்குச்சீட்டுகளை கிழித்தெறிந்து அதிமுகவினர் ரகளை

By A S Ramesh
Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் வேளாண் கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுகவினரிடையே ஏற்பட்ட மோதலால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கான நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுகவினர் இரு தரப்பு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் என 29 பேர் போட்டியிட்டனர்.

Conflict in the agricultural cooperative union in Erode district

இந்நிலையில் வாக்கு பதிவு செய்வதற்காக சங்க உறுப்பினர்கள் காத்திருந்த நிலையில் அங்கு வந்த அதிமுக வின் ஒரு தரப்பினர், வாக்குசாவடியில் கேமராவில் காட்சிகள் பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Conflict in the agricultural cooperative union in Erode district

திடீரென வாக்கு பதிவு மையத்திற்குள் நுழைந்த அவர்கள் அங்கிருந்த வாக்கு சீட்டுகளை கிழித்தெறிந்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும் வாக்கு பெட்டியையும் உடைத்தனர். இதனால் சங்க உறுப்பினர்கள் வாக்குகளை பதிவு செய்யாமல் வெளியேறினர். இதனையடுத்து தேர்தலை ரத்து செய்வதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

English summary
Executive members of Agricultural Co-operative Marketing Association, Kodumudi, Erode district, one of the leaders of the AIADMK, argued with the police to protest against the registration of the camera in the vote. Suddenly, they entered the ballot box and torn up the ballot boxes and raced. The election was canceled.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X