எச்.ராஜா புதுக்கோட்டைக்குள் நுழைய கூடாது... சிபிஐ கூட்டத்தில் அதிரடி தீர்மானம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எச்.ராஜாவை புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் அனுமதிக்க கூடாது என்று அந்த மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தை ராசேந்திரன் தலைமையேற்று நடத்தினார். மாவட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். நிறைய தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டது.

CPI decides not to allow H.Raja to Pudhukottai after his Periyar statue remark

இந்த கூட்டத்தில் இனி எச்.ராஜாவை புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் அனுமதிக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. எச். ராஜா வன்முறையை தூண்டும் விதமாக பேசி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்ததும் , தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்றும் எச்.ராஜா கூறியது பெரிய அளவில் பிரச்சனை ஆனது. அதற்கு பின்பே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் எச். ராஜா பேசும் கூட்டங்களுக்கு புதுக்கோட்டையில் அனுமதி அளிக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக அம்மாவட்ட போலீஸ் நிலையத்தில் மனு கொடுக்க இருக்கிறார்கள் எச்.ராஜா மதக்கலவரத்தை துண்ட பார்க்கிறார்கள் என்று மனு கொடுக்க இருக்கிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
CPI decides not to allow H.Raja to Pudhukottai after his Periyar statue remark.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற