For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இவங்களும் ஒரு காலத்துல வி்க்கி விக்கி அழுதவங்கதான்...!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக அமைச்சர்கள் பதவியேற்றபோது அழுத அழுகை இன்னும் மக்கள் மனதை விட்டு அகலவில்லை. இன்று வரை பேஸ்புக்கில் கமெண்ட் அடித்துக் கலாய்த்து வருவோம் ஓய்வதாக தெரியவில்லை.

ஆனால் அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் பொது இடத்தில் அழுவது என்பது உலகம் பூராவும் நடந்துகொண்டேதான் இருக்கிறது.

நம்ம ஊர் அமைச்சர்களுக்கு முன்பும் கூட ஏகப்பட்ட பேர் கர்ச்சீப் நனைந்து பிழிந்து உதறும் அளவுக்கு அழுது கொட்டியுள்ளனர்.

பில் கிளிண்டன் முதல் லேட்டஸ்டாக நம்ம ஊர் சரிதா தேவி வரை அழாத கண்களே இல்லை என்று கூறும் அளவுக்கு அழுது வடிந்த பிரபலங்களின் பட்டியல் மிகப் பெரியது.

பளார் விட்ட ஹர்பஜன்.. தேம்பி அழுத ஸ்ரீசாந்த்

பளார் விட்ட ஹர்பஜன்.. தேம்பி அழுத ஸ்ரீசாந்த்

முன்பு ஐபிஎல் போட்டியின்போது ஹர்பஜன் சிங் பளார் என அறை விட தேம்பித் தேம்பி பச்சைக் குழந்தை போல அழுது பரபரப்பை ஏற்படுத்தினார், இப்போது கிரிக்கெட்டிலிருந்தே தடை விதிக்கப்பட்டு விட்ட ஸ்ரீசாந்த்.

சத்தம் போடாமல் அழுத ஒபாமா

சத்தம் போடாமல் அழுத ஒபாமா

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடந்த 2012ம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது கண்ணீர் விட்டு அழுதார். ஆனால் அழுகிறாரா என்று தெரியாத அளவுக்கு அமைதியாக அழுதார். கண்ணிலிருந்து வந்த கண்ணீரைப் பார்த்தபோதுதான் அடடா, அதிபர் அழுகிறாரே என்று பலருக்கும் தெரிய வந்தது.

கிளிண்டன் விட்ட கண்ணீர்

கிளிண்டன் விட்ட கண்ணீர்

1999ம் ஆண்டு மறைந்த ஜோர்டான் மன்னர் ஹூசேனுக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் செய்தியை வாசித்தபோது அப்போதைய அதிபர் பில் கிளிண்டன் கண்ணீர் விட்டு அழுதார்.

அத்வானியை அழ விட்ட மோடி

அத்வானியை அழ விட்ட மோடி

மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது தொடர்பான விவகாரம் படு சூடாக இருந்த சமயத்தில் அத்வானி அழுத காட்சி வெளியாகி பரபரப்பைக் கூட்டியது.

விம்மி அழுத அகாஸ்ஸி

விம்மி அழுத அகாஸ்ஸி

முன்னாள் டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே அகாஸ்ஸி, 2006ம் ஆண்டு தோல்வியுடன் டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றபோது அழுத அழுகை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

ஊழல்வாதி எதியூரப்பாவின் அழுவாச்சி..!

ஊழல்வாதி எதியூரப்பாவின் அழுவாச்சி..!

சுரங்க ஊழலில் சிக்கி பதவியை ராஜினாமா செய்வதற்குள் பாஜகவினரை பாடாய்ப்படுத்தி எடுத்து பின்னர் விலகிய எதியூரப்பா அழுத அழுகையும் பிரபலமானதுதான்.

வென்றதும் அழுத யுவராஜ் சிங்

வென்றதும் அழுத யுவராஜ் சிங்

2011ல் நடந்த உலகக் கோப்பைப் போட்டியின்போது இறுதிப் போட்டியில் இந்தியா வென்று சாம்பியன் ஆனபோது யுவராஜ் சிங் ஆனந்தத்தில் முட்டி போட்டு அழுதது அனைவரையும் நெகிழ வைத்தது.

சானியாவின் அழுகை

சானியாவின் அழுகை

தன்னை பாகிஸ்தான் மருமகள் என்று விமர்சித்த தெலுங்கானா பாஜகவின் புகாரை மறுத்து விளக்கிப் பேசியபோது சானியா மிர்ஸா அழுதது இது.

சத்தம் போட்டு அழுத ஜப்பான் ஊழல் எம்.பி

சத்தம் போட்டு அழுத ஜப்பான் ஊழல் எம்.பி

ஜப்பானைச் சேர்ந்த ஊழல் புகாருக்கு உள்ளான ரியூடாரோ நோனோமுரா என்ற எம்.பி தன் மீதான புகார்களை மறுத்து சத்தம் போட்டு அழுத காட்சி இது...!

இவர்கள் வரிசையில் இவர்களும்...!

இவர்கள் வரிசையில் இவர்களும்...!

இந்த வரிசையில் தற்போது நம்ம ஊர் அமைச்சர்களின் அழுகையும் இடம் பெற்று விட்டது. எப்படியோ வரலாற்றில் இடம் பெற்று விட்டனர் அமைச்சர்கள்...!

வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே!

English summary
Not only TN ministers, who cried during the oath taking recently, there are many leaders and sports persons who have cried for various reasons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X