தனியார் பஸ்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது... சுங்கச்சாவடிகளுக்கு அமைச்சர் உத்தரவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்ட்ரைக்கால் அரசுப் பேருந்துகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழக அரசு சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்நிலையில் தனியார் பேருந்துகளுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என சுங்கச்சாவடிகளுக்கு அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.

customs officials not to collect customs duty for private busses: Vijaya bhaskar

அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்று இரண்டாவது நாளாக நீடிக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

போக்குவரத்து பிரச்சனையை சமாளிக்கும் வகையில் மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தனியார் பேருந்துகள் இயக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் பேருந்துகளுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என சுங்கச்சாவடிகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Due to strike Tamil nadu govt allowing private busses in Chennai. Minister MR Vijayabaskar ordered the customs officials not to collect customs duty for private busses.
Please Wait while comments are loading...