For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: டைம்ஸ் ஆப் இந்தியா, தினமலர் மீது ஜெ. அவதூறு வழக்கு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு தொடர்பாக கட்டுரைகளை வெளியிட்டதற்காக டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் தினமலர் நாளேடுகள் மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளத்துக்கு காரணமே செம்பரம்பாக்கம் ஏரி நீரை முறையின்றி அதிக அளவு திறந்துவிட்டதுதான் காரணம் என்பது பொதுவான குற்றச்சாட்டு. இதே குற்றச்சாட்டை முன்வைத்து ஊடகங்களும் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன.

Defamation cases against TOI and dinamalar

கடந்த டிசம்பர் 12-ந் தேதி இது தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் தினமலர் நாளேடுகள் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. இந்த கட்டுரைகளை வெளியிட்டதற்காக இந்த இரு நாளேடுகள் மீது முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை முதனன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் இந்த வழக்குகள் இன்று தொடரப்பட்டன.

ஏற்கனவே ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் மற்றும் நக்கீரன் ஏடுகள் மீது அடுக்கடுக்கான அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamilnadu CM Jayalalithaa has filed defamation cases against Times of India and Dinamalar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X