காட்டுத் தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க கோவையில் இருந்து விமான படை ஹெலிகாப்டர்கள் புறப்பட்டன

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தேனி காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை மீட்கும் பனி தீவிரம்

  தேனி: தேனி மலையில் காட்டுத்தீக்குள் சிக்கியுள்ள கல்லூரி மாணவிகளை மீட்க இந்திய விமானப்படை வீரர்கள் விரைகிறார்கள். தமிழக முதல்வர் கோரிக்கையை ஏற்று விமானப்படை உதவி அளிக்கப்படுகிறது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

  ஹெலிகாப்டரில் சென்று ரசாயனங்களை தூவி தீயை அணைப்பதோடு, ஹெலிகாப்டரில் மாணவிகளை மீட்கவும் இந்த நடவடிக்கை உதவும். இதனிடையே, தேனி மாவட்டத்தில் தீ விபத்து பாதித்த இடத்திற்கு துணை முதல்வர் ஓபிஎஸ் விரைந்தார்.

  Defence Ministry joins rescue efforts to save college girls trapped in Forest Fire in Theni

  அமைச்சர் சீனிவாசன், மாவட்ட கலெக்டர் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தீயணைப்பு வீரர்களுடன், போலீசாரும் மீட்பு பணியில் குதித்துள்ளனர்.

  காட்டுத் தீ என்பது மிகவும் மோசமானது என்பதால், ஹெலிகாப்டரில் இருந்து ரசாயனங்களை தூவி தீயை அணைப்பதே சிக்கியுள்ள 40க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளை மீட்க முடியும் என தெரிகிறது.

  இந்த நிலையில் தற்போது காட்டுத் தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளது.கோவை சூலூர் விமான படை தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Responding to the request from the Hon CM of TamilNadu on the forest -fire related issue 20 students are caught in Kurangani, Theni district. Instructed IAF to help in rescue and evacuation, says Nirmala Sitharaman

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற