அதிரடி ஆய்வு.. ஆளுநரை விட்டு தமிழகத்தில் ஆழம் பார்க்கிறதா டெல்லி?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது ஏன்?- வீடியோ

  சென்னை: தமிழக அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையிட்டால் என்னதான் நடக்கும் என ஆழம் விட்டுப் பார்க்கும் வேலையைத்தான் டெல்லி செய்கிறதோ? என்கிற சந்தேகம் எழுப்பப்படுகிறது.

  தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் மரபுகளை மீறி திடீரென மாவட்ட நிர்வாகங்களில் ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு மேற்கொண்டார். ஆளுநரின் இந்த நடவடிக்கை தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டும் இருந்தது.

  அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆளுநர் பன்வாரிலால் நேற்று வெற்றிகரமாக கோவையில் ஆய்வு நடத்தினார். அப்போதே பன்வாரிலாலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கோவையில் தந்தை பெரியார் தி.க. தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

  திருப்பூரில் ஆய்வு

  திருப்பூரில் ஆய்வு

  இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுமே ஆளுநருக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இதனையும் மீறி இன்று திருப்பூரிலும் ஆய்வு நடத்த கெத்தாக ஆளுநர் பன்வாரிலால் புறப்பட்டுச் சென்றார்.

  பாதியில் ரத்து

  பாதியில் ரத்து

  திருப்பூரில் சில நிகழ்ச்சிகளில் ஆளுநர் பங்கேற்ற போதும் ஆய்வை நடத்தாமல் திரும்பிவிட்டார். இதற்கு காரணமே போராட்டங்கள் வெடிக்குமோ என்கிற அச்சம்தான் என கூறப்படுகிறது.

  பரீட்சார்த்த முயற்சி

  பரீட்சார்த்த முயற்சி

  ஆளுநரின் நடவடிக்கையைப் பார்க்கும்போது டெல்லி ஆழம்விட்டு பார்க்கிறதா? என்கிற சந்தேகம் எழாமல் இல்லை. தமிழகத்தில் டெல்லி சொல்வதை கேட்கும் அரசுதான் இருக்கிறது.. அதனால் நிர்வாகத்தை கையிலெடுத்து பார்ப்போம்.... என்ன எதிர்வினை வருகிறது என்பதற்காக ஒரு பரீட்சார்த்த முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.

  மோசமான விளைவுகள்

  மோசமான விளைவுகள்

  டெல்லிக்கு எதிராக தமிழகம் ஏற்கனவே பெரும் கொந்தளிப்பில் இருக்கிறது. இப்போது தமிழகத்தின் உரிமையை அப்படியே விழுங்கிவிட நினைத்தால் அது மோசமான விளைவுகளைத்தான் உருவாக்கும் என்பதை சற்றேனும் டெல்லி புரிந்திருக்கக் கூடும் என்றே தெரிகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Sources said that Delhi wants to take over the TamilNadu Govt through the Governor. But TamilNadu Political Parties strongly opposed the Delhi's move.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற