தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது.. அடித்து சொல்லும் துணை முதல்வர் ஓபிஎஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் இதுவரை 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Dengue fever is under control in Tamilnadu : OPS

கடந்த 6 நாட்களில் மட்டும் 62 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தவறி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். டெங்குவால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து சரியான புள்ளிவிவரங்களை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் டெங்குவை கட்டுப்படுத்த போதிய அளவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் உள்ளனர் என்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Deputy CM O.Paneerselvam said that The Dengue fever is under control in Tamilnadu. Doctors and nurses are sufficient to control it.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற