அரசுக்கு எதிராக சதி செய்தவர்.. ஓபிஎஸ் மீது தினகரன் குற்றச்சாட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil
அதிமுக அமைச்சர்களை வச்சு செய்யும் டிடிவி- வீடியோ

சென்னை: தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள தினகரன், சட்டசபையில் தொடர்ந்து தமக்கு பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழக சட்டசபையில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாவது நாளாக இன்றும் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றை தொடர்ந்து இன்றும் வெளிநடப்பில் ஈடுபட்ட ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ தினகரன், சட்டசபையில் தனக்கு பேச தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவதாக கூறினார்.

Dinakaran slams ministers and says TN Govt is in Deficit

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டசபையில் தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முயற்சி செய்தும் அதற்கு அனுமதி வழங்க சபாநாயகர் மறுத்து வருவதாக கூறினார். மேலும் பேசிய அவர், தமிழக அரசு கடுமையான நிதி பற்றாக்குறையில் சிக்கி தவிப்பதாக தெரிவித்தார்.

போக்குவரத்து துறை மட்டுமின்றி அனைத்து துறைகளும் நிதி பற்றாக்குறையில் சிக்கித்தவிக்கும் தினகரன் கூறினார். ஆனால் இதையெல்லாம் எடப்பாடி அரசு மறைத்து நாடகமாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் தன்னை துணைப் பொதுச்செயலாளராக தற்போதை அமைச்சர்கள் தான் முன்மொழிந்ததாக குறிப்பிட்ட அவர், சில அமைச்சர்களின் சதியால் தான் தாம் கட்சியிலிருந்து தனித்து விடப்பட்டதாக கூறினார். அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சரமாரியாக விமர்சித்த தினகரன், இந்த அரசுக்கு எதிராக சதி செய்தவர்களே தற்போது அதை காப்பாற்றுவதைப் போல நடிப்பதாக குற்றஞ்சாட்டினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dinakaran slams ministers and says TN Govt is in Deficit. And complaints that Speaker is not allowing him to answer the Accusation

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற