For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இறுதி வாக்காளர் பட்டியல்.. மாவட்ட வாரியாக வாக்காளர்கள் விவரம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ள. இதில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இறுதிப் பட்டியலை இன்று வெளியிட்டனர்.

இதில் மாவட்ட வாரியாக வாக்காளர்கள் விவரம்:

District wise final voters list

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியலை இன்று மாவட்ட ஆட்சியா் விவேகனந்தன் வெளியிட்டார். இதில் ஆண் வாக்காளா்கள் 5,90,867, பெண் வாக்காளா்கள் 5,65,356, மற்றவா்கள் 90 பேர். மொத்த வாக்காளா்கள் 11,56,313

நெல்லை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் மொத்தம் 24,51,666 வாக்காளர்கள். இதில் ஆண்கள் 12,10,527, பெண்கள் 12,41,079, இதர பிரிவினர் 60

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டார். மாவட்டம் முழுவதும் மொத்தம் 1720072 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் - 8,49,920 பெண்கள் - 8,70,012 மற்றவர்கள் - 140 திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண் வாக்காளரை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

திரூப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 48,569 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 10,49,031 பேரும், பெண் வாக்காளர்கள் 10,41,133 பேரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன் வெளியிட்டார். மொத்தம் 19,04,433 வாக்காளர்கள். ஆண்கள் - 9,44,025 பெண்கள் - 9,60,393 மற்றவர்கள் 15. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆண் வாக்காளரை விட பெண் வாக்காளர்கள் அதிகம்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் தட்சிணாமூர்த்தி வெளியிட்டார். இதில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம். ஆண்கள் 6,69,897 பெண்கள் 6,90,836 மற்றவர்கள் 101. புதிதாக சார்ந்தவர்கள் 30,047. மொத்த வாக்காளர்கள் 13,60,834.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் சுரேஷ்குமார் வெளியிட்டடார் ஆண்கள் 9,97,379 பெண்கள் 9,96,907 மற்றவர்கள் 71. புதிதாக சேர்ந்தவர்கள் 76,318. மொத்த வாக்காளர்கள் 19,94,357.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவான் வெளியிட்டார். ஆண்கள் - 7,64,427 பெண்கள் 7,63,970. மற்றவர்கள் 119. மொத்தம் 15,28,516 வாக்காளர்கள் உள்ளனர்.

புதுக்கோட்டையில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 12,23,183 ஆகும்.

English summary
Here is the list of District wise final voters list, which was released today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X