For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3வது முறையாக கூட்டணி அமைத்த விஜயகாந்த்.. 3 முறையும் வேறு வேறு கட்சிகளுடன்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் தேமுதிக, ம.ந.கூ கூட்டணியுடன் இணைந்து போட்டியிடப் போவதாக இன்று அறிவித்துள்ள நிலையில் அக்கட்சியின் தலைவரான விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தது முதல் இதுவரையில் பெற்றுள்ள வெற்றிகள், கூட்டணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது ம.ந.கூ படை.

கடந்த 2005ம் ஆண்டில் செப்டம்பர் 14ல் மதுரையில் விஜயகாந்த்தால் தொடங்கப்பட்டது தேமுதிக. அதுவரையில் சினிமா மூலமாக மக்களிடம் பெரும் செல்வாக்கினை சம்பாதித்து வைத்திருந்த "கேப்டன்" என அழைக்கப்பட்ட விஜயகாந்த் ஆட்சிக்கும் ஆசைப்பட்டு அன்றுதான் அரசியலில் குதித்தார்.

அதேசமயம், சினிமாவும், அரசியலும் ஒன்றல்ல என்று முதல் தேர்தலில் தனித்துப்போட்டியிட்ட விஜயகாந்த் பாடம் கற்றுக் கொண்டார் 2006ம் ஆண்டில் நடைபெற்ற 13வது சட்டசபைத் தேர்தலில்.

முதல் தேர்தல்:

முதல் தேர்தல்:

செல்வாக்கு என்பது தனிமனிதனுக்கு மட்டுமல்ல, கட்சி சார்ந்தவர்களுக்கும் வேண்டும் என்பது அந்த தேர்தலில் விருத்தாச்சலத்தில் மட்டும் வெற்றி பெற்ற விஜயகாந்திற்கு தெரிய வந்திருக்க வேண்டும். ஏனெனில், 234 தொகுதிகளில் தனித்து நின்ற தேமுதிகவிற்கு, விஜயகாந்த் நின்ற விருத்தாச்சலம் மட்டுமே கையில் கிடைத்தது. அத்தேர்தலில் அவரது கட்சிக்குக் கிடைத்த மொத்த வாக்குகள் 27,64,223.

2009ல் லோக்சபா தேர்தல்:

2009ல் லோக்சபா தேர்தல்:

இதனையடுத்து 2009ம் ஆண்டில் நடைபெற்ற லோக்சபா தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டது தேமுதிக. அதில் கிடைத்தது 31,26,117 ஓட்டுகள் மட்டுமே. வெற்றி கிடைக்கவில்லை, மாறாக கிடைத்தது 39 தொகுதிகளிலும் முட்டை மட்டுமே.

முதல் கூட்டணி:

முதல் கூட்டணி:

இந்நிலையில்தான் இப்படியே போனால் வேலைக்காகது என்று கூடிப் பேசிய விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் வியூகம் வகுத்து 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணியில் கைகோர்த்தனர். இதில் ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளில் 29ல் வெற்றி பெற்ற தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்றது.

2வது கூட்டணி

2வது கூட்டணி

இந்தக் கூட்டணி சில மாதங்களிலேயே சிதறிப் போனது. இதைத் தொடர்ந்து 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது பாஜகவுடன் இணைந்து மெகா கூட்டணியில் இடம் பெற்றது தேமுதிக. அதில் 14 தொகுதிகளில் போட்டியிட்டு பரிதாபத் தோல்வியைப் பெற்றது.

3வது கூட்டணி

3வது கூட்டணி

இப்போது மீண்டும் ஒரு கூட்டணியில் இணைந்துள்ளார் விஜயகாந்த். இந்த முறை 124 தொகுதிகளில் அவரது கட்சி போட்டியிடப் போகிறது. ஆண்டவனுடனும் மக்களுடனும் மட்டுமே கூட்டணி என்று ஆரம்பித்து அதிமுக, பாஜகவை (இந்தக் கூட்டணியில் பாமகவும் அடக்கம்) பார்த்துவிட்டு இப்போது மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்ஆகியோருடன் கூட்டணி சேர்ந்துள்ளார் விஜய்காந்த். மிச்சம் இருப்பது நாம் தமிழர், திமுக, தாமக தான்!

English summary
DMDK alliances till from its beginning in TN, now its 3rd alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X