ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு... திமுக அமளி... - புறக்கணித்து வெளிநடப்பு #TNAssembly

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் வெளிநடப்பு- வீடியோ

  சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் முழக்கமிட்டதோடு சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

  2018 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ளது. தமிழ்தாய் வாழ்த்து முடிந்த உடனே ஸ்டாலின் பேச வாய்ப்பு கேட்டார். அப்போது மறுக்கப்பட்டது.

  DMK MLAs walks out from TamilNadu assembly

  ஆளுநர் பேச தொடங்கிய உடன் திமுகவினர் முழக்கமிட்டனர். அப்போது ஆளுநர் உட்காருங்க என்று கூறினார். ஆனால் திமுக எம்எல்ஏக்கள் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
  கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள், காங்கிரஸ், இந்திய முஸ்லீம் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.

  செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மாநில சுயாட்சிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டினார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  DMK MLAS walked out from Tamilnadu Assembly against Governer speech.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற