காவிரி: கோவையில் கறுப்பு புறாக்களை பறக்கவிட்டு திமுக போராட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மோடிக்கு எதிர்ப்பு..விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் போராட்டம்- வீடியோ

  கோவை: கோவையில் கறுப்பு உடை அணிந்து கொண்டு கறுப்பு நிறத்தினாலான புறாக்களை பிடித்து அதன் காலில் துண்டுசீட்டுகளை வைத்து பறக்கவிட்டு திமுகவினர் போராட்டம் நடத்துகின்றனர்.

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கோவையில் திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து கொண்டு பேரணி சென்றனர்.

  DMK protest in Coimbatore by make flying pigeons

  பின்னர் திமுகவினரும் கூட்டணி கட்சியினரும் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். காவிரி வாரியம் தேவை என கேட்டு எழுதப்பட்ட அட்டையை கருப்பு புறாக்களின் காலில் கட்டிப் பறக்கவிட்டனர்.

  தமிழர்களை வஞ்சிக்கும் மோடியே திரும்பி போ என்றும் தமிழக விவசாயிகளை காப்பாற்று என்றும் திமுகவினர் கருப்பு சட்டையில் முழக்கமிட்டனர். இதேபோல் சென்னையில் திமுக எம்எல்ஏ மாசுப்பிரமணியன் தலைமையில் திமுகவினர் ராட்சத பலூன்களை பறக்கவிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

  பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தை வஞ்சிப்பதாக திமுகவினர் முழங்கினர். காவிரி வாரியம் கோரியும், மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் சைதாப்பேட்டையில் போராட்டம் நடத்தினார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Demanding to form Cauvery board, DMK in Coimbatore protest by make flying pigeons with placards in their foot.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற