For Quick Alerts
For Daily Alerts
எச் ராஜாவை கைது செய்யாததே பெரியார் சிலை உடைப்புக்கு காரணம்.. ஸ்டாலின் குற்றச்சாட்டு

பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக சட்டசபையில் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்- வீடியோ
சென்னை: எச் ராஜாவை கைது செய்யாததே பெரியார் சிலை உடைப்புக்கு காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
அண்மையில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக பாஜக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நேற்று பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. பெரியார் சிலை உடைப்பு சம்பவங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
சிலை உடைப்பு சம்பவம் தொடர்பாக எச் ராஜாவை கைது செய்யாததால் பெரியார் சிலைகள் உடைக்கப்படுவது தொடர்கிறது என்றும் குண்டர் சட்டத்தில் ஹெச். ராஜாவை கைது செய்திருக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!