பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி- திமுக தலைவர் கருணாநிதி கருத்து

Subscribe to Oneindia Tamil

DMK will oppose Modi, hints Karunanidhi
சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டிருப்பது தொடர்பாக திமுகவின் நிலையை அக்கட்சித் தலைவர் கருணாநிதி விளக்கியுள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கருணாநிதி அளித்த பதில்:

கேள்வி: அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியின் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கிறதே, அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: இதிலே அந்தக் கட்சியைச் சேர்ந்த அத்வானி அவர்களின் கருத்து என்ன என்று சொல்லுங்கள்; அதற்குப் பிறகு என் கருத்தைக் கேட்கலாம்.

கேள்வி: அவர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. உங்கள் கருத்தைக் கூறுங்கள்?

பதில்: திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்காத - யார் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டாலும், தி.மு. கழகம் ஏற்கனவே கொண்டுள்ள மதவாத எதிர்ப்புக் கருத்திலிருந்து பின்வாங்காது.

டெல்லி தூக்கு சரிதான்

கேள்வி : டெல்லி பாலியல் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதைப் பற்றி?

பதில் : தூக்குத் தண்டனை பற்றி எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு என்றாலும், இந்தக் குறிப்பிட்ட குற்றத்தைப் பொறுத்தவரை, நீதிபதிகள் சரியான முடிவினைத் தான் அறிவித்திருக்கிறார்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+