For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொப்பிக்காக அடித்துக் கொண்ட பெண்கள்.. வேனில் ஏறி விந்தியாவைத் தொட முயன்ற குஷி தொண்டர்!

|

சென்னை: தேர்தல் பிரசாரம் என்றாலே கலகலப்புக்குப் பஞ்சமிருக்காது. அதிலும் அதிமுக தேர்தல் பிரசாரங்களின்போது செமத்தியான காமெடிக் காட்சிகளை நிறையவேக் காண முடிகிறது.

அதிலும் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளும் பிரசாரக் கூட்டங்களின்போது நாம் ஜெயலலிதா பேச்சை விட சைடில் காணும் காட்சிகளில்தான் அதிக சுவாரஸ்யங்களைப் பார்க்க முடிகிறது.

அம்மா வருவதற்கு முன்பும், அம்மா போன பின்னரும் நடக்கும் களேபரங்களைப் பார்த்தால் நிச்சயம் வாய் விட்டுச் சிரிப்பீர்கள்... அப்படித்தான் சிரிப்பாய் சிரித்தபடி போய்க் கொண்டிருக்கிறது அதிமுகவின் பிரசாரக் கூட்டங்கள்..

டொப்பி டொப்பி..

டொப்பி டொப்பி..

ஜெயலலிதா நடந்து கொண்ட ஒரு பிரசாரக் கூட்டத்திற்காக கூட்டி வரப்பட்ட பெய்டு தொண்டர்களிடையே அதாவது பெண்களிடையே நடந்த ஒரு குழாயடி சண்டையை காண நேரிட்டது. அதாவது சாதாரண தொப்பிக்காக நடந்த கும்மாங்குத்து சண்டை அது.

நீயே எடுத்துக்கிட்டா எப்படி.. எனக்கும் கொடுடி

நீயே எடுத்துக்கிட்டா எப்படி.. எனக்கும் கொடுடி

அந்தக் கூட்டம் நடந்ததோ கடுமையான வெயிலுக்கு மத்தியில் கூட்டி வரப்பட்ட பெண்களுக்கு கட்சிக்காரர்கள் தொப்பி விநியோகம் செய்தனர்.

அடேங்கப்பா என்ன அடி..

அடேங்கப்பா என்ன அடி..

அந்தத் தொப்பியை கொண்டு வந்த நபர் சற்றும் எதிர்பாராத வகையில் அத்தனை பெண்களும் அவர் மேல் பாய்ந்து தொப்பியைக் கைப்பற்ற முயல, அயய்யோ சிக்குனா தக்காளிச் சட்னிதாண்டா என்று பயந்து அந்த நபர் தொப்பியை அப்படியே போட்டு விட்டு ஓடி விட்டார்.

இந்தா புடி.. அந்தா புடி...

இந்தா புடி.. அந்தா புடி...

அதற்குப் பிறகு நடந்த காட்சிகள்தான் பயங்கரமானவை. ஆளாளுக்கு தொப்பியை அள்ள முயன்று அடிதடியில் குதித்தனர். சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொப்பியை அள்ளிக் கொண்டு போக முயன்றபோது அதை மற்ற பெண்கள் புகுந்து தடுத்து அதைக் கைபபற்ற முயல பெரும் அடிதடியே நடந்தது.

ஆளுக்கு ஒருபக்கமா பிடிச்சு இழுங்கம்மா

ஆளுக்கு ஒருபக்கமா பிடிச்சு இழுங்கம்மா

கையில் சிக்கிய தொப்பியை களவு போகாமல் காப்பாற்ற பெண்கள் பட்ட பாட்டையும், அதை எப்படியாவது புடுங்கிரனும் என்று மற்ற பெண்கள் மல்லுக்கட்டியதையும் பாரத்தபோது வுமன் எம்பவர்மென்ட்தான் ஞாபகத்திற்கு வந்தது.

உடும்புப் பிடி

உடும்புப் பிடி

அதில் ஒரு சுடிதார் போட்ட பெண் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட தொப்பிகளை கைப்பற்றி விட்டார. ஆனால் அதைப் பறிக்க அவரைச் சுற்றி சில பெண்கள் ரவுண்டு கட்டினர். ஆனால் அந்த சுடிதார் பெண் அவர்களிடமிருந்து தப்பிய லாவகம் இருக்கிறதே.. அப்படி ஓடுகிறார், திடீரென குனிகிறார், உட்கார்ந்தபடியே ஓடுகிறார். பாய்கிரார், பம்முகிறார்.. கடைசி வரை தொப்பியை மட்டும் விடவே இல்லை...வாவ்.. உடும்புப் பிடிய்யா...

விந்தியாவைத் தொட முயன்ற தொண்டர்

விந்தியாவைத் தொட முயன்ற தொண்டர்

இது இப்படி என்றால் இன்னொரு ஊரில் அதிமுகவுக்காக நடிகை விந்தியா வேனில் பிரசாரம் செய்ய முயன்றபோது அவருக்கு ஒரு தொண்டர் பொன்னாடை போர்த்த முயன்று டெர்ரரைக் கிளப்பினார்.

ஸ்டாலினைப் போட்டுத் தாக்கியபோது

ஸ்டாலினைப் போட்டுத் தாக்கியபோது

அப்போது விந்தியா மு.க.ஸ்டாலினை போட்டுத் தாக்கி பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு தொண்டர் வேட்டியை லைட்டாக தூக்கியபடி ஜீப்பின் முன்புறமாக விடுவிடுவென ஏறினார்.

நிறுத்தி நிதானமாக

நிறுத்தி நிதானமாக

அடடா, நக்மாவுக்கு ஏற்பட்ட கதி போல நடக்கப் போகிறதோ என்று அனைவரும் பயந்தபோது அந்த நபர் நிறுத்தி நிதானமாக ஜிப்பின் முன்புறம் நின்றபடி ஒரு பொனனாடையை எடுத்து உதறி விரித்தார். பிறகு அதை விந்தியாவுக்குப் போர்த்த முயன்றார். அதைப் பார்த்து மிரண்ட விநதியா பேச்சை நிறுத்தினார்..

எறங்குய்யா.. யோவ் எறங்குய்யா..

எறங்குய்யா.. யோவ் எறங்குய்யா..

இதைபப் பார்த்து விந்தியாவுக்கு அருகில் இருந்த கட்சிககாரர் யோவ் முதல்ல இறங்குய்யா எனறு கத்தினார். கீழே இருந்தவர்களும் பொன்னாடைக்காரரை சத்தம் போடவே அவர் பொன்னாடையை மடக்கியபடி இறங்கிப் போனார்.

செந்தில் சிங்கமுத்துக்குப் போடலாம்ல...

செந்தில் சிங்கமுத்துக்குப் போடலாம்ல...

இதைப் பார்த்த சிலர், செந்தில் சிங்கமுத்து கூடத்தான் பிரசாரதிற்கு வர்றாங்க. அவங்களுக்குப் போடாம அதென்ன விந்தியாவுக்கு மட்டும் பொன்னாடை என்று நீட்டி முழக்கியபடி கிண்டலடித்தனர்.

ஏப்ரல் 22ம் தேதி வரைக்கும் இப்படித்தான் இருக்கும்..என்ன செய்றது!

English summary
Election campaign is on full swing in all over the state. And the campaign scenes will make you laugh non stop. Here is a round up.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X