For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடைகோடி குமரியில் பிறந்து.... தலைநகரில் 'மாவீரனாக' 'கல்வித் தந்தையாக' கோலோச்சிய ஜேப்பியார்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் கடைகோடி கன்னியாகுமரி மாவட்டத்தின் குக்கிராமத்தில் பிறந்து எம்.ஜி.ஆர். காலத்தில் தலைநகர் சென்னையில் மாவீரனாக வலம் வந்து பின் கல்வித் தந்தையாக உருவெடுத்தவர் மறைந்த ஜேப்பியார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் முட்டம் கிராமத்தில் பிறந்த ஜே. பங்குராஜ் என்ற என்ற ஜேப்பியார் தீவிர எம்.ஜி.ஆர். ரசிகர். காவல்துறையில் கான்ஸடபிளாகப் பணியாற்றியவர். அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய போது உறுப்பினரானார்.

பின்னர் எம்.ஜி.ஆரின் தளபதியாக விஸ்வரூபமெடுத்த அவர் அன்றைய அதிமுகவின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட செயலராக செயல்பட்டார்....

அதிமுகவின் மாவீரன்

அதிமுகவின் மாவீரன்

சென்னையில் 1986-ம் ஆண்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்ட போது அதைத் தீர்க்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டவர் ஜேப்பியார். இதனால் அவரை அதிமுகவினர் 'மாவீரன்' என புகழாரம் சூட்டி மகிழ்ந்தனர். தமிழகத்தில் அப்போதிருந்த சட்டமேலவையில் அரசு கொறாடாகவும் செயல்பட்டார். தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார்.

கல்வித் தந்தையாக விஸ்வரூபம்

கல்வித் தந்தையாக விஸ்வரூபம்

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் தீவிர அரசியலைவிட்டு ஒதுங்கி கல்வி நிறுவனங்களில் கவனம் செலுத்தினார். 1988-ம் ஆண்டு சத்தியபாமா பொறியியல் கல்லூரியை நிறுவினார்.

பின்னர் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, பனிமலர் பொறியியல் கல்லூரி ஆகியவற்றையும் உருவாக்கினார். இதனைத் தொடர்ந்து சத்யபாமா பல் மருத்துவ கல்லூரி, செயின்ட் மேரீஸ் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட், பனிமலர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட், எஸ்.ஆர்.ஆர். பொறியியல் கல்லூரி, மாமல்லன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பனிமலர் பாலிடெக்னிக் என ஏராளமான கல்வி நிறுவனங்களை உருவாக்கியவர் ஜேப்பியார்.

ஆங்கிலம் பேச தயங்காதவர்

ஆங்கிலம் பேச தயங்காதவர்

பின்னாளில் சட்டப் படிப்பை முடித்ததுடன் 2000-ம் ஆண்டுகளில் அண்ணா பல்கலைக் கழகத்தில் பி.ஹெச்.டி பட்டமும் பெற்றார். ஆங்கிலத்தில் அதிக புலமை இல்லாத போதும் தமக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பேசுவதற்கு எப்போதும் தயங்காதவர் ஜேப்பியார்.

பிற துறைகளில்...

பிற துறைகளில்...

கல்வி நிறுவனங்கள் அல்லாமல் ஜேப்பியார் குடிநீர், ஜேப்பியார் பால், ஜேப்பியார் இரும்பு, ஜேப்பியார் சிமெண்ட், ஜேப்பியார் உப்பு, தொழில்நுட்ப பூங்கா என பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டவர். பத்திரிகை துறையிலும் கால் பதித்தவர்.

பத்திரிகையாளரின் அனுபவம்

பத்திரிகையாளரின் அனுபவம்

ஜேப்பியார் நடத்திய மூக்குத்தி இதழில் பணியாற்றிய அனுபவம் குறித்து மூத்த பத்திரிகையாளர் நா.பா. சேதுராமன் சேது தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இப்படி எழுதியுள்ளார்....

தாய்- ஏட்டில் பணியாற்றி "தாய்" க்கு நான் வாங்கிக் கொடுத்தது முதல் சம்பளம் ! இரண்டாவதாக என் தாயார் எப்போதுமே (இப்போதும்) அணிய பிரியப்படாத "மூக்குத்தி" (அண்ணன் ஜேப்பியார் நடத்திய இதழ்) யில் பணியாற்றி வாங்கியது இரண்டாவது சம்பளம் ... ஒரு ஏணிக்கு இரண்டு பக்கம் பிடிபோல என்னைப் போன்ற பலருக்கு அண்ணன்கள் வலம்புரியாரும், ஜேப்பியாரும்... மாபெரும் கல்வித்தந்தையாய் அவர் காலத்தை அமைத்துக் கொள்ள அன்றைய முதலீடாய் இருந்த இதழியல் தொடர்பு "மூக்குத்தி"....
கணிசமான சம்பளமாய் 80- களில் வாரம் 300. ரூபாயை கொடுத்த நானறிந்த பெரிய முதலாளி. இந்த 25. ஆண்டுகளில் ஓரிருமுறை செய்தியாளனாய் அவரை சந்தித்ததோடு சரி. "ஏதேனும் தேவையென்றால் வந்து பார்" என்றிருக்கிறார், பலமுறை... அழுத்தமாக... "தேவைப்பட்டால் பார்த்துக் கொள்ளலாம் " என்றிருப்பேன். எனக்கு எப்போதுமே பேராளர்கள் தேவைப்படாத அளவு நண்பர்களால் அன்பர்களால் என்னுடைய சிறிய உலகம் சூழப்பட்டு இருக்கிறது.
இன்றைய தேதியில் என் உலகு விகடனில் திருவாளர்கள் ப.திருமாவேலன், ரா.கண்ணன், கி.கார்த்திகேயன் போன்றோரால் சூழப்பட்டிருக்கிறது, நிறைந்து நிறைந்து... இதுபோதும் !
‎அண்ணன்ஜேப்பியாருக்கு‬ ‪#‎என்ஆழ்ந்தஅஞ்சலி‬
எனப் பதிவிட்டிருக்கிறார்.

காலமானார்...

காலமானார்...

ஒரு சில தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அவருக்கு ராமாபாய் என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். சென்னை புறநகரான சோழிங்கநல்லூரில் உள்ள சத்தியபாமா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று காலமானார்.

English summary
Jeppiaar, the founder-chancellor of Sathyabama University, passed away of old age in Chennai late on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X