இன்று பொறியாளர்கள் தினம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொறியாளர்கள்...
அவர்கள் நம் கனவுப்பொருட்களின் உயிரூட்டிகள்..
பொருட்களின் அடிப்படை அறிவியல் கொண்டு
நம் புதுப்புது கனவுகளை மெய்ப்பிக்க
இரவு பகலாய் உழைக்கும் பிரம்மாக்கள்!
ஒவ்வோர் துறையிலும்
புதிய புரட்சிகள் செய்திடவே
அறிவியல், தொழில் நுட்பம் கொண்டு
பொறியாளர், நம் கண்கள் பார்த்து
மனதை கொள்ளை கொள்ளும்
உயிரோவியமாய் புதுப்புது
கண்டுபிடிப்புகளை தருகின்றார்!
வானுயர்ந்த கட்டிடங்கள்..
நீண்டு நெகிழ்ந்த பாலங்கள்
கடலுக்குள்ளே ரயில் பயணம்
விண்ணில் நிற்கும் செயற்கைக்கோள்கள்
நீரைக்கிழித்து பயணிக்கும் கப்பல்கள்..
சூரிய சக்தியை மின்சாரமாக்கும் பலகைகள்
உடற்கூறை ஆராய்ந்து துல்லியமாய்
நோய் கண்டிடும் மருத்துவக்கருவிகள்
எத்தனையெத்தனை கண்டுபிடிப்புக்கள்!
சொல்லத்தான் பக்கங்கள் போதாது!
நமது நாளைய தேவைக்காக நேற்றே யோசித்து
இன்று உருவம் கொடுப்பவர்கள் பொறியாளர்கள்!
அன்றாடம் நாம் உபயோகிக்கும்
பலப்பல இயந்திரங்கள் தந்ததும் பொறியாளரே!
நாம் அனுதினமும் உபயோகிக்கும்
ஒவ்வொரு பொருளுமே எதோ ஓர்
பொறியியல் துறையில் எங்கோ பலர்
உழைத்து உயிர் தந்த வரப்பிரசாதமே!
பறவை பார்த்து நமக்கு விமானம் செய்து
பரிசாய் வழங்கிட்டார்!
தும்பியை பார்த்து வியந்து நமக்கு
ஹெலிகாப்டர் செய்தே பரிசளித்தார்!
உலகையே சிறு கிராமமாக்கி
நினைத்தால் வீடியோ கால் பேசும்
வசதியை நமக்கு வழங்கிட்டார்!
மாட்டு வண்டியில் பயணித்த நாம்
புல்லெட் ரயிலுக்கு அடிகோலுகிறோம்!
வான்வெளியை பார்த்து வியந்திட்ட நாம்
விண்வெளிப்பயணம் செய்கிறோம்!
நேற்று அவர்கள் படைத்தது
இன்று பழைய கதையாய் காணாமல்போகிறது!
பொறியியலாளர் உள்ளவரை
பஞ்சமில்லை நமக்கு புதிய படைப்புகள்!

- ஆகர்ஷிணி

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Engineers day is being celebrated in India today.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற