For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலீசாருக்கு டிமிக்கி கொடுக்கும் செந்தில்பாலாஜி.. பிப்.14 வரை கால அவகாசம்

மோசடி வழக்கு விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை என்று போலீசார் புகார் தெரிவித்துள்ளனர்

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

Recommended Video

    Senthil Balaji has charged that CM EPS group is trying bribe him for Rs 20 crore

    சென்னை: போக்குவரத்து துறையில் வேலைவாங்கி தருவதாக பணமோசடியில் ஈடுபட்ட வழக்கு விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை என்று போலீசார் புகார் தெரிவித்துள்ளனர்

    போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ரூ.95 லட்சம் மோசடி செய்துவிட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் மனு தாக்கல் செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அருள்மொழி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிடோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    Ex Minister Senthil balaji gets summoned again

    இந்த வழக்கில் நிபந்தனை முன் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனைத்தொடர்ந்து அவர் தினமும் விசாரணை அதிகாரி முன்னிலையில் கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் செந்தில்பாலாஜி இதுவரை நேரில் ஆஜராகமல் இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

    இதுதொடர்பாக போலீசார் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். விசாரணைக்கு இதுவரை செந்தில்பாலாஜி ஆஜராகவில்லை என்றும் நிபந்தனை முன்ஜாமீனின் உத்தரவு படி அவர் நடந்துக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் செந்தில்பாலாஜியின் வழக்கறிஞர் சார்பாக நேரில் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. இதனைத்தொடர்ந்து பிப்-14 செந்தில்பாலாஜி நேரில் ஆஜராக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    English summary
    Ex Minister Senthil balaji gets summoned again. Police has compliant that Ex minister senthil balaji denies to appear for investigation in court. And he has been ordered to appear on feb 14th
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X