ஓபிஎஸ் அணியில் இணைந்த மாஜி எம்.எல்.ஏ. மலரவன்- தீபா முகாமில் இருந்து எஸ்கேப்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபா பேரவையில் இருந்த கோவை முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் திடீரென முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியில் இணைந்துவிட்டார்.

அதிமுக தலைமையை சசிகலா கைப்பற்ற ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவு பெருகியது. முன்னாள் எம்.எல்.ஏக்கள் கூட தீபாவை ஆதரித்தனர்.

EX MLA supports to Team OPS

இதனிடையே ஓபிஎஸ் தலைமையில் கலகக் குரல் வெடிக்க தீபா பக்கம் இருந்த அதிமுக தொண்டர்கள் அப்படியே முகாம் மாறினர். இருப்பினும் கோவை முன்னாள் எம்.எல்.ஏ மலரவன் போன்றோர் தீபா அணியிலே இருந்தனர்.

இப்போது தீபாவும் அவரது கணவரும் அடித்துக் கொண்டு அசிங்கப்பட்டு நிற்கின்றனர். அதேநேரத்தில் சசிகலா, தினகரனுக்கு எதிராக ஓபிஎஸ்-எடப்பாடி அணிகள் கைகோர்க்கும் நிலைமையும் உருவாகியுள்ளது.

இந்நிலையில் தீபா முகாமில் இருந்து கோவை முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் எஸ்கேப்பாகிவிட்டார். ஓபிஎஸ் அணியில் மலரவன் இன்று இணைந்துவிட்டார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ex MLA Malaravan today joined to Team OPS from Deepa lead "MAD" Peravai.
Please Wait while comments are loading...