100 கலப்பு திருமண ஜோடிகளின் பட்டியலை வெளியிட்டு மிரட்டல்.. கலவரத்தைத் தூண்டிய பேஸ்புக் பக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  100 கலப்பு திருமண ஜோடிகளின் பட்டியலை வெளியிட்டு மிரட்டல்- வீடியோ

  சென்னை: பேஸ்புக்கில் இந்துத்துவா கொள்கை கொண்ட பக்கங்கள் நிறையச் செயல்பட்டு வருகிறது. அவற்றில் முக்கியமான பேஸ்புக் பக்கம் தான் 'ஹிந்துத்துவா வர்தா'.

  இந்தப் பக்கம் பல மாதங்களாக பேஸ்புக்கில் தீவிரமாக இயங்கி வருகிறது. இதன் அர்த்தம் ஹிந்துத்துவா குறித்த விவாதம் என்பது ஆகும்.

  நீண்ட காலமாகவே இவர்கள் இதில் பொய்யான தகவலைகளை பரப்பி வந்து இருக்கிறார்கள். நேற்று இவர்கள் வெளியிட்ட பேஸ்புக் போஸ்ட் ஒன்று பெரிய அளவில் பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது.

  பேஸ்புக் போஸ்ட்

  பேஸ்புக் போஸ்ட்

  இவர்கள் 100 கலப்பு திருமணம் செய்த தம்பதிகளின் பட்டியலை நேற்று வெளியிட்டு இருக்கிறார்கள். இதில் பலரது புகைப்படமும், முகவரியும் கூட இடம்பெற்று உள்ளது. இவர்களை உடனடியாக இந்து மக்கள் தேடி கொலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

  நான்தான்

  நான்தான்

  இவ்வளவு நாள் மறைமுகமாகச் செயல்பட்ட அந்தப் பக்கத்தின் அட்மின் டிவிட்டரில் தன்னை அறிமுகப்படுத்தினார். 'சதீஸ் மியாலவார்ப்பு' என்ற அந்த நபர் இந்தப் பக்கத்தை நடத்தப் பெருமையாக இருக்கிறது என்றுள்ளார். அந்த 100 பேர் மீதும் உடனடியாக தாக்குதல் நடத்த வேண்டும் என்றும் வன்முறையைத் தூண்டியுள்ளார்.

  புகார் அளித்தது

  புகார் அளித்தது

  இதுகுறித்து தனியார் நிறுவனம் ஒன்று உடனடியாக பேஸ்புக்கிடமும், டிவிட்டரிடமும் புகார் அளித்தது. அதேபோல் அவர்கள் இதற்கு முன் செய்த வதந்திகளை, வன்முறைகளையும் பட்டியலிட்டது. இதை மொத்தமாக அந்த நிறுவனம் புகாராக ஸ்கிரின்ஷாட் எடுத்து அளித்து இருக்கிறது.

  மொத்தமாகத் தூக்கியது

  மொத்தமாகத் தூக்கியது

  இதன் காரணமாக அந்த பேஸ்புக் பக்கம் தூக்கப்பட்டது. அதோடு இல்லாமல் அவரின் டிவிட்டர் பக்கமும் நீக்கப்பட்டு இருக்கிறது. இவர் மீது போலீசில் எந்த விதமான புகாரும் கொடுக்கப்படவில்லை.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Facebook takes down Hindutva Varta page after controversial post about inter-faith couples. They have asked Hindu people to take action against Muslim men who married Hindu women.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற