ரஜினி மக்கள் மன்றத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம் நடத்தும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரஜினி மக்கள் மன்றத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம்- வீடியோ

  சென்னை: ரஜினி மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர்களை சேர்க்கும் முகாமை சென்னை திருவிக நகரில் அவரது ரசிகர்கள் இன்று நடத்தினர்.

  ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அறிவித்தார். அதற்கடுத்த நாளே ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் ஒரு இணையதளத்தை உருவாக்கினார்.

  Fan club members are conducting membership camp for Rajini Makkal Mandram

  இந்த இணையத்தில் பொதுமக்கள் இணைந்து கொண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் அந்த இணையதளத்துக்கு செயலி மூலமும் இணையதளம் மூலமும் உறுப்பினர்கள் இணைத்து கொள்ளத் தொடங்கினர்.

  இதையடுத்து மாவட்டந்தோறும் அதற்கான பொறுப்பாளர் பதவி உள்பட பல்வேறு பதவிகளுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். அவ்வாறு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தி வருகின்றனர்.

  அந்த வகையில் சென்னை திருவிக நகரில் உறுப்பினர் சேர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Fans club members are conducting a camp to make joining members for Rajini Makkal Mandram. It was created by Rajini on January 1st.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற