கோவை எஸ்.பி. அலுவலகத்தில் கடன் கொடுத்தவர் மகனுடன் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: ரூ.10 லட்சம் கடனை வாங்கியவர் திருப்பிக் கொடுக்காததால் கோவை எஸ்பி அலுவலகத்தில் மகனுடன் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டம் கருமத்தப்பட்டியை சேர்ந்தவர் குமார். இவர் அங்குள்ள நகைக்கடைகாரருக்கு ரூ.10 லட்சம் கடன் கொடுத்துள்ளார். அதை திருப்பிக் கேட்டு அவரிடம் குமார் நடையாய் நடந்து வருகிறாராம்.

Father and son tried for self immolation in Coimbatore S.P. office

எனினும் அந்த நகைக்கடைக்காரர் பணத்தை கொடுக்காமல் குமாரை அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காவல் துறையில் புகார் கொடுத்தும் பயனில்லையாம்.

இதையடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு குமாா் தனது மகனுடன் வந்திருந்தார். அப்போது தன்னிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தன் மீதும், மகன் மீதும் ஊற்றினார்.

இதனால் அங்கிருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அங்கிருந்த காவலர்கள் குமாரையும், அவரது மகனையும் தடுத்து நிறுத்தினர்.

நெல்லையில் கந்து வட்டிக் கொடுமையால் 4 பேர் தீக்குளித்து உயிரிழந்த நிலையில் கோவையில் கடன் கொடுத்தவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Father and Son belongs to Karumathampatti tried for self immolation in Coimbatore SP Office because of not getting his money from Jewellery shop owner who borrows Rs. 10 Lakhs.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற