For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹேப்பி பர்த்டே "மூஞ்சி புக்கு"!

Google Oneindia Tamil News

சென்னை: நேருக்கு நேரில் பேசிக் கொள்வதெல்லாம் ரொம்ப பழைய பேஷனாகி விட்டது. இப்போது நேரில் பார்த்துக் கொண்டால் கூட, கையில் உள்ள ஸ்மார்ட் போனில் பேஸ்புக்கை நோண்டிக் கொண்டேதான் ம்.. ம் என்று ம் போட்டபடிதான் பேசிக் கொள்கிறார்கள் பெரும்பாலும். அந்த அளவுக்கு மனித குலத்தின் முகத்தையே மாற்றி விட்டது பேஸ்புக்.

பசுமை நிறைந்த நினைவுகளே.. பாடித் திறந்த பறவைகளே என்று கனத்த தொப்பையுடன் பாடித் திறந்த பழைய பறவைகள் எல்லாம் மறுபடியும் பேஸ்புக் மூலம் சந்தித்து.. கடந்து போனதைப் பற்றி சி்ந்திக்க வாசல் கதவைத் திறந்து விட்டுள்ளது இந்த பேஸ்புக்.

புதிய உறவுகள், புதிய நட்புகள், பிரி்ந்து போனவர்களை மீண்டும் சந்திக்க உதவுவது என்று டி.ராஜேந்தர் போல அஷ்டாவதனியாக பல வேலைகளைச் செய்து உலகையே ரொம்ப சுருங்கி் போக வைத்து விட்டது இந்த பேஸ்புக்.

இப்படிப்பட்ட பெருமை கொண்ட பேஸ்புக்குக்கு இன்று பிறந்த நாள். 12 வருடங்களுக்கு முன்பு பிப்ரவரி 4ம் தேதிதான் மார்க் ஸுக்கர்பெர்க் பேஸ்புக்கை பிரசவித்தார்.. இன்று பிரபஞ்சத்தின் தோழனாக மாறி நிற்கிறது பேஸ்புக். இதை நண்பர்கள் தினமாக பேஸ்புக் கொண்டாடுகிறது.

இந்த பேஸ்புக் எப்படியெல்லாம் மனிதர்களை மாற்றிப் போட்டுள்ளது பாருங்களேன்...

உறவுகள், நட்புகள்

உறவுகள், நட்புகள்

எப்போதோ பிரிந்து போன உறவுகளையும், நண்பர்களையும் மீண்டும் தேடி வந்து நம்மிடம் சேர்ப்பிக்க இந்த பேஸ்புக் உதவுகிறது. கொஞ்சம் தேடிப் பார்த்தால் போதும் பல வருடங்களுக்கு முன்பு பிரிந்து போனவர்களைக் கூட சடுதியில் கண்டுபிடித்து விடலாம்.. அதுதான் பேஸ்புக்கின் மகிமை.

விருப்பப்படி வாழ்த்தலாம்

விருப்பப்படி வாழ்த்தலாம்

முன்பெல்லாம் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வது என்பதே பெரிய வேலையாகும். கிரீட்டிங் கார்டு வாங்க வேண்டும். பிறகு அதை போஸ்ட் செய்ய வேண்டும். அது சரியான நேரத்திற்குப் போய்ச் சேர வேண்டும். இப்போது அப்படியா.. அவர்களே நமக்கு நினைவூட்டி நமக்குப் பிரியமானவர்களின், நட்பு வட்டாரத்தின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை எளிமையாக்கி விட்டனர்.

கேசரி கிண்டியபடி கேண்டிகிரஷ்

கேசரி கிண்டியபடி கேண்டிகிரஷ்

கேண்டிகிரஷ் உள்ளிட்ட விதம் விதமான விளையாட்டுகள். முன்பெல்லாம் வீடியோ கேம்ஸ் ஆட தனியாக இடம் தேட வேண்டும். இன்று மொபைல் போனில் சமையல் கட்டில் கூட கேண்டிகிரஷ் ஆடியபடி ஜாலியாக வேலை பார்க்கலாம்.

கண்டம் விட்டுக் கண்டம் தாவும் அன்பு

கண்டம் விட்டுக் கண்டம் தாவும் அன்பு

பல நாடுகளில் பேஸ்புக்கைத் தடை செய்து வைத்துள்ளனர் என்றாலும் கூட கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அன்பை அந்த அரசுகளால் தடுக்க முடியாது என்பதே உண்மை. அதுதான் பேஸ்புக் சமூகத்தின் வலிமையும் கூட.

புகைப்படங்கள், வீடியோக்கள்

புகைப்படங்கள், வீடியோக்கள்

நமது வீட்டில் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை சுடச் சுட போட்டோ பிடித்து அப்படியே அப்லோட் செய்து போஸ்ட் போட்டால் எங்கெல்லாம் உறவுகள் பரவிக் கிடக்கின்றவோ அத்தனை பேரும் ஒரே சமயத்தில் பார்த்து மகிழ வழி செய்வது இந்த பேஸ்புக்.

எங்கெங்கும் பேஸ்புக்

எங்கெங்கும் பேஸ்புக்

எப்படி ஜிமெயிலை விட்டுப் பிரியச் சொன்னால் ஒருவரால் முடியாதோ அதேபோலத்தான் பேஸ்புக்கை விட்டு விலகுவது என்பதும். அது கிட்டத்தட்ட ஒரு போதை போல மாறி விட்டது.

நல்லதோ கெட்டதோ

நல்லதோ கெட்டதோ

பேஸ்புக்கிலேயே பலர் மூழ்கிக் கிடக்கின்றனர். அதற்கு அடிமை போல மாறி விட்டனர். ஆனால் நல்லது என்று இருந்தால் கெட்டதும் இருக்கும். கெட்டது இருந்தால் நல்லதும் வந்து சேரும். அந்த வகையில் பேஸ்புக்கை நாம் பயன்படுத்தும் விதத்தில்தான் அதன் குணம் அமையும்.

அன்பைக் கரை சேர்த்த பேஸ்புக்

அன்பைக் கரை சேர்த்த பேஸ்புக்

சென்னை மாநகரம் வெள்ளத்தில் சிக்கித் தவித்தபோது பேஸ்புக் மூலமாகத்தான் பல்வேறு உதவிகளை மக்கள் பரிமாறிக் கொண்டனர். அந்த வகையில் சென்னை மக்களின் ஏகோபித்த அன்பை பேஸ்புக் அள்ளிக் கொண்டது அந்த சமயத்தில்.

ஹேப்பி பர்த்டே

ஹேப்பி பர்த்டே

முகநூல், மூஞ்சிபுக்கு என்று செல்லமாக விதம் விதமாக அழைக்கப்படும் பேஸ்புக்.. இன்றைய இளைஞர் சமுதாயத்தின் அடையாளம் மட்டுமல்ல.. உலக சமுதாயத்தின் பிரிக்க முடியாத அங்கமும் கூட..எனவே, பேஸ்புக்குக்கு சந்தோஷமாக சொல்வோம் ஹேப்பி பர்த் டே!

English summary
12 years back, on this same day the Facebook was born and today, it is ruling the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X