குரங்கணி மலை தீ விபத்து எதிரொலி.. கொல்லிமலையிலும் ட்ரெக்கிங் செல்ல தடை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கேரளா, கொடைக்கானலில் மலையேற்றத்துக்கு தற்காலிக தடை

  நாமக்கல்: குரங்கணி மலை தீ விபத்தை தொடர்ந்து கொல்லி மலையிலும் ட்ரெக்கிங் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

  தேனி மாவட்டம் குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ட்ரெக்கிங் சென்ற 36 பேர் சிக்கினர். இவர்களில் 9 பேர் நேற்று காலையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் நிஷா என்ற இளம் பெண் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  Forest department banns trekking in Kollimalai

  இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்த நிலையில் இன்று திவ்யா என்ற மற்றொரு பெண்ணும் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.

  குரங்கணி மலை காட்டுத்தீயை தொடர்ந்து கொடைக்கானல், ஆணைமலை பகுதிகளில் ட்ரெக்கிங் செல்ல வனத்துறை நேற்று தடை விதித்தது. கோடைக்காலத்தில் காட்டுத்தீயின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டது.

  இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையிலும் ட்ரெக்கிங் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. காரவள்ளி, புளியஞ்சோலை வழியாக கொல்லிமலைக்கு மலையேறும் பயிற்சி மேற்கொள்ள மே 31 ஆம் தேதி வரை வனத்துறை தடை விதித்துள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Forest department banns trekking in Kollimalai after forest fire kills 11 in Kurangani forest.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற