For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடங்கா சேட்டை செய்யும் "மதுக்கரை மகாராஜ்".. பிடிக்க வரும் அண்ணன் - தம்பி உள்ளிட்ட 4 கும்கிகள்!

Google Oneindia Tamil News

கோவை: கோவை மாவட்டம் மதுக்கரையில் ஒரு காட்டு யானை பயங்கர அட்டகாசம் செய்து வருகிறது. தனி ஒருவனாக அந்த யானை செய்து வரும் அட்டகாசத்தால் மதுக்கரை பகுதி மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த யானையைப் பிடிக்க 3 கும்கிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

இந்த சேட்டைக்கார யானையால் வனத்துறை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வாழை, தென்னை உள்ளிட்ட பல பயிர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதையடுத்து ஆபரேஷன் மதுக்கரை மகாராஜ் என்ற பெயரில் யானையைப் பிடிக்க வனத்துறையும், காவல்துறையும் களம் குதித்துள்ளது.

Foresters to nab menacing elephant in Madukkarai

4 கும்கி யானைகள் உதவியுடன் யானையை பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சாடிவயல் கும்கி முகாமில் உள்ள பாரி, சுஜய் மற்றும் டாப்சிலிப் யானைகள் முகாம் கும்கி கலீம், முதுமலை புலிகள் சரணாலயத்தில் இருந்து கும்கி விஜய் ஆகியவை வருகின்றன.

இதலி் விஜய் வந்து சேர்ந்து விட்டது. பாரி, சுஜய் நாளை வருகிறார்கள். இவர்கள் இருவரும் அண்ணன் தம்பி. எனவே இருவரும் இணைந்து கலக்கலாக செயல்பட்டு சேட்டைக்கார யானையைப் பிடித்து விடுவார்கள் என நம்பப்படுகிறது. கலீல் டாப் சிலிப்பிலிருந்து நாளை வருகிறார். இந்த கும்கிகளுக்காக நவக்கரை வனக் குடியிருப்பில் ஒரு தற்காலிக முகாம் போட்டுள்ளனர். அங்கு தங்கிக் கொண்டு அந்தசேட்டைக்கார யானையை இவர்கள் பிடிக்கப் போகிறார்கள்.

இந்த யானை ஆபரேஷன் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆலோசனைக் கூட்டத்திற்கும் ஏற்பட்டுள்ளது.

மகாராஜா பிடிபடுவாரா?

English summary
Foresters have indulged in Operation Madurakkrai Maharaja to nab a wild elephant in the area with the help of 4 Kumkis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X